Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
கட்டாயக் காதல். ஆபாச செய்கை. கல்லூரி மாணவியை தொடர்ந்து தொந்தரவு. ஒரே ஒரு போன் கால். சிங்கப்பெண் அதிரடிப்படையின் மாஸ் செயல். நெகிழ்ச்சியில் மக்கள்.!

கட்டாயக் காதல். ஆபாச செய்கை. கல்லூரி மாணவியை தொடர்ந்து தொந்தரவு. ஒரே ஒரு போன் கால். சிங்கப்பெண் அதிரடிப்படையின் மாஸ் செயல். நெகிழ்ச்சியில் மக்கள்.!

Tamizhan media 3 days ago

தூத்துக்குடி மாவட்டம், செக்காரக்குடி பகுதியைச் சேர்ந்த 31 வயது சமையல் தொழிலாளியான சொக்கலிங்கம் என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு கல்லூரி மாணவியை நீண்ட நாட்களாகக் காதலிக்குமாறு வற்புறுத்தி வந்துள்ளார்.

ஏற்கனவே திருமணமாகி, மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வந்த இவர், அந்த மாணவியிடம் தொடர்ந்து எல்லையற்ற தொல்லைகளைக் கொடுத்து வந்ததோடு மட்டுமல்லாமல், ஆபாசமான செய்கைகளிலும் ஈடுபட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். இதனால் மனமுடைந்த மாணவியின் தந்தை, உடனடியாக பெண்களுக்கான பாதுகாப்பிற்குரிய ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’யின் கட்டணமில்லா உதவி எண்களான 1091-ஐத் தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் பேரில் உடனடியாகச் செயல்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை சப்-இன்ஸ்பெக்டர் ஆரோக்கியஜென்சி தலைமையிலான போலீசார், செக்காரக்குடி கிராமத்திற்கு விரைந்து சென்று சொக்கலிங்கத்தை அதிரடியாகக் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து, அவர் தூத்துக்குடி புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். மாணவியிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட சொக்கலிங்கம் மீது போலீசார் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamizhan media