Dailyhunt
கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா..? இனி 3 நாள் லேட்டானாலும் ஃபைன் கிடையாது.! ஆர்பிஐ-யின் அதிரடி மாற்றங்கள் இதோ.!!

கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா..? இனி 3 நாள் லேட்டானாலும் ஃபைன் கிடையாது.! ஆர்பிஐ-யின் அதிரடி மாற்றங்கள் இதோ.!!

Tamizhan media 2 weeks ago

ந்திய ரிசர்வ் வங்கி (RBI) கிரெடிட் கார்டு பயனாளர்களுக்குச் சாதகமான பல புதிய விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது.

இதன் சிறப்பம்சமாக, இனி பில் செலுத்தும் கடைசி தேதி முடிந்து 3 நாட்கள் வரை ‘கிரேஸ் பீரியட்’ எனப்படும் கூடுதல் அவகாசம் வழங்கப்படும்; இந்த 3 நாட்களுக்குள் நிலுவைத் தொகையைச் செலுத்தினால் எந்தவித அபராதமும் வசூலிக்கப்படாது. மேலும், ஒருவேளை அபராதம் விதிக்கப்பட்டாலும், அது மொத்த பில் தொகைக்கும் கணக்கிடப்படாமல், நீங்கள் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகைக்கு (Outstanding Amount) மட்டுமே விதிக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

வங்கிகள் தன்னிச்சையாகக் கட்டணங்களை உயர்த்துவதைத் தவிர்க்க, விதிமுறைகளில் ஏதேனும் மாற்றம் செய்தால் அதனை ஒரு மாதத்திற்கு முன்பே வாடிக்கையாளர்களுக்குத் தெரிவிக்க வேண்டும். இந்த 3 நாள் கூடுதல் அவகாசத்தைப் பயன்படுத்துவதால் உங்களது கிரெடிட் ஸ்கோர் (CIBIL) பாதிக்கப்படாது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒளிவுமறைவற்ற வெளிப்படையான வங்கிச் சேவையை உறுதி செய்யவும், வாடிக்கையாளர்கள் கூடுதல் நிதிச் சுமையிலிருந்து தப்பிக்கவும் இந்த அதிரடி மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamizhan media