Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
கோலிவுட்டே ஆவலோடு எதிர்பார்க்கும் 'அந்த ஒரு நாள்' . பிரிந்த குடும்பம் ஒன்று சேர்கிறதா?. ஜேசன் சஞ்சய் போடும் 'சிக்மா' மாஸ்டர் பிளான்.பெரும் எதிர்பார்ப்பு.!

கோலிவுட்டே ஆவலோடு எதிர்பார்க்கும் 'அந்த ஒரு நாள்' . பிரிந்த குடும்பம் ஒன்று சேர்கிறதா?. ஜேசன் சஞ்சய் போடும் 'சிக்மா' மாஸ்டர் பிளான்.பெரும் எதிர்பார்ப்பு.!

Tamizhan media 6 days ago

மிழக முதல்வர் விஜய் அவர்களின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் 'சிக்மா' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஜூலை 18-ஆம் தேதி நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நீண்ட நாட்களாகக் குடும்ப நிகழ்வுகளில் ஒன்றாகக் காணப்படாத இக்குடும்பத்தினர், இந்த விழாவின் மூலம் மீண்டும் ஒரே மேடையில் இணைய வாய்ப்பு இருப்பதாக சினிமா வட்டாரங்கள் பேசுகின்றன. தனது முதல் படத்தின் ஆடியோ விழாவிற்குத் தந்தை விஜய், தாய் சங்கீதா, தாத்தா எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் பாட்டி ஷோபா ஆகிய ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் அழைக்க ஜேசன் சஞ்சய் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படாவிட்டாலும், சஞ்சயின் தந்தை என்ற முறையில் முதல்வர் விஜய் இந்த விழாவில் கலந்துகொள்ளக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில், சஞ்சயின் தாயார் சங்கீதா இந்த இசை வெளியீட்டு விழாவில் நிச்சயம் பங்கேற்பார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. விரைவில் இந்த இசை வெளியீட்டு விழா குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவுள்ள நிலையில், முதல்வர் விஜய் பங்கேற்பாரா என்ற எதிர்பார்ப்பு கோலிவுட் மற்றும் அரசியல் வட்டாரங்களில் பரவலாக எழுந்துள்ளதுடன், ஒட்டுமொத்தத் திரையுலகமும் ரசிகர்களும் இந்த விழாவை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamizhan media