Dailyhunt
கோட்டையில் க்ளைமாக்ஸ்..! ஸ்டாலின், உதயநிதி படங்கள் அகற்றம். விஜய் வருகைக்காக தயார் செய்யப்படும் தலைமை செயலகம்..!!

கோட்டையில் க்ளைமாக்ஸ்..! ஸ்டாலின், உதயநிதி படங்கள் அகற்றம். விஜய் வருகைக்காக தயார் செய்யப்படும் தலைமை செயலகம்..!!

Tamizhan media 1 week ago

மிழகச் சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, ஆட்சி மாற்றத்திற்கான பணிகள் சென்னை தலைமைச் செயலகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

தவெக தலைவர் விஜய் விரைவில் முதலமைச்சராகப் பொறுப்பேற்க உள்ள நிலையில், அங்குள்ள அமைச்சர்களின் அறைகளை காலி செய்யும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.

தற்போதுள்ள திமுக அமைச்சர்கள் தங்களது அரசு அலுவலக அறைகளை காலி செய்து வரும் நிலையில், அங்கிருந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் புகைப்படங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. அமைச்சர்கள் தங்களது உடமைகளை எடுத்துச் செல்வதுடன், சுவர்களில் இருந்த தலைவர்களின் படங்களையும் கவனமாக அப்புறப்படுத்தி வருகின்றனர்.

தலைமைச் செயலகம் மட்டுமின்றி, அடையாறில் உள்ள அமைச்சர்களின் அரசு இல்லங்களிலும் காலி செய்யும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. புதிதாகப் பொறுப்பேற்க உள்ள விஜய் தலைமையிலான அமைச்சரவையின் அமைச்சர்கள் விரைவில் இந்த அறைகளையும் இல்லங்களையும் பயன்படுத்த உள்ளனர். தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள இந்த மிகப்பெரிய மாற்றத்தின் அடையாளமாக இந்தப் புகைப்படங்கள் அகற்றப்படும் நிகழ்வு பார்க்கப்படுகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamizhan media