Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
குறி சொல்ல வந்த பெண்களுடன் ரகசிய தொடர்பு..? சிக்கிய கோவில் பூசாரி. போலீசில் முதல் மனைவி கொடுத்த ஷாக்கிங் புகார்.!!

குறி சொல்ல வந்த பெண்களுடன் ரகசிய தொடர்பு..? சிக்கிய கோவில் பூசாரி. போலீசில் முதல் மனைவி கொடுத்த ஷாக்கிங் புகார்.!!

Tamizhan media 2 weeks ago

வடி அருகே பொத்தூர் பகுதியில் உள்ள கருப்பசாமி கோவில் பூசாரியான சாந்தகுமார் (45) என்பவர் மீது, அவரது முதல் மனைவி கவுசல்யா ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

கோவிலுக்கு வரும் பக்தர்களுக்குக் குறி சொல்லும் தொழிலைச் செய்து வந்த சாந்தகுமாருக்கு, அதன் மூலம் பல பெண்களுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளதாக அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக சாந்தகுமாரின் இந்தத் தவறான நடத்தையால் கணவன்-மனைவி இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், தனது கணவரின் சட்டவிரோதச் செயல்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான போக்கு குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி கவுசல்யா காவல்துறையினரைத் தஞ்சம் அடைந்துள்ளார்.

இப்புகாரின் அடிப்படையில், ஆவடி அனைத்து மகளிர் போலீசார் பூசாரி சாந்தகுமார் மீது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆன்மீகத்தின் பெயரால் பெண்களை ஏமாற்றி வந்த சாமியாரின் மீதான இந்தப் புகார் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamizhan media