Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
குஷியில் 'குடிமகன்கள்'. பாட்டிலுக்கு ரூ.10 கூடுதல். "சஸ்பெண்ட்" இல்லை. நேரடியாக "பணிநீக்கம்". ஊழியர்களுக்கு அரசு கொடுத்த ஷாக் எச்சரிக்கை.!

குஷியில் 'குடிமகன்கள்'. பாட்டிலுக்கு ரூ.10 கூடுதல். "சஸ்பெண்ட்" இல்லை. நேரடியாக "பணிநீக்கம்". ஊழியர்களுக்கு அரசு கொடுத்த ஷாக் எச்சரிக்கை.!

Tamizhan media 6 days ago

மிழக டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களுக்கு கூடுதலாக 10 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை வசூலிக்கப்படுவதாக எழுந்த புகார்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தமிழக அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

முன்னதாக, தங்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச ஊதியத்தை (ரூ .12,000 – ரூ .15,000) வைத்து குடும்பம் நடத்த முடியாது என்றும், சம்பளத்தை உயர்த்தித் தந்தால் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை நிறுத்திக் கொள்வதாகவும் டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களின் கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு தற்போது டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25 சதவீத ஊதிய உயர்வை அறிவித்துள்ளது. இதன்படி, உதவி விற்பனையாளர்களுக்கு ரூ .17,925, விற்பனையாளர்களுக்கு ரூ 19,413 மற்றும் சூப்பர்வைசர்களுக்கு ரூ .22,313 என ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. அரசின் இந்த புதிய ஊதிய உயர்வு நடவடிக்கையால் அரசுக்கு கூடுதலாக ரூ.110.74 கோடி செலவு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அதிரடி ஊதிய உயர்வைத் தொடர்ந்து, டாஸ்மாக் கடைகளில் இனி பாட்டிலுக்கு கூடுதலாக பணம் வசூலித்தால் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் உடனடியாக பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என தமிழக அரசு மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதே வேளையில், ஊழியர்களின் இந்த சம்பள உயர்வு காரணமாக மதுபானங்களின் விலை ஏதேனும் உயர்த்தப்படுமா என்ற அச்சம் நிலவிய சூழலில், மதுபான விலை உயர்த்தப்படாது என்றும் அரசு தெளிவுபடுத்தியுள்ளது. இதனால் இனி கடைகளில் கூடுதல் காசு கொடுக்க வேண்டியதில்லை என்பதால் மதுபான பிரியர்கள் நிம்மதியும் மகிழ்ச்சியும் அடைந்துள்ளனர். அரசின் இந்த அதிரடி நடவடிக்கை டாஸ்மாக் கடைகளில் தினந்தோறும் நடந்து வந்த வாக்குவாதங்களுக்கும், கூடுதல் கட்டணக் கொள்ளைக்கும் நிரந்தரத் தீர்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamizhan media