Dailyhunt
குஷியோ குஷி..! பதவியேற்றதும் விஜய் போடும் முதல் கையெழுத்து. தமிழகப் பெண்களுக்கு காத்திருக்கும் மெகா சர்ப்ரைஸ்..!!

குஷியோ குஷி..! பதவியேற்றதும் விஜய் போடும் முதல் கையெழுத்து. தமிழகப் பெண்களுக்கு காத்திருக்கும் மெகா சர்ப்ரைஸ்..!!

Tamizhan media 1 week ago

மிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அபார வெற்றி பெற்றுள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜய் மே மாத இறுதிக்குள் முதலமைச்சராகப் பதவியேற்க அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

முந்தைய ஆட்சியில் வழங்கப்பட்டு வந்த கலைஞர் மகளிர் உரிமைத் தொகை இனி கிடைக்காது என்ற சூழல் நிலவினாலும், விஜய் தனது தேர்தல் வாக்குறுதியில் பெண்களுக்கு மாதம் 2,500 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்பு இல்லத்தரசிகள் மற்றும் பெண்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதிய ஆட்சி அமைந்தவுடன், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது முதல் அதிரடி நடவடிக்கையாகப் பெண்களுக்கு மாதம் 2,500 ரூபாய் வழங்கும் திட்டத்திற்கான கோப்பில் முதல் கையெழுத்திடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டம் நடைமுறைக்கு வரும் பட்சத்தில், தமிழகப் பெண்களின் பொருளாதார நிலை மேம்படும் எனத் தவெக தொண்டர்கள் நம்பிக்கையுடன் தெரிவித்து வருகின்றனர். தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் புதிய அரசு காட்டும் ஆர்வம் தமிழக அரசியலில் உற்று நோக்கப்படுகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamizhan media