Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
குஷியோ குஷி.. சிலிண்டருக்கு ரூ.350 மானியம்... சற்றுமுன் முதல்வர் அறிவித்தார்..!

குஷியோ குஷி.. சிலிண்டருக்கு ரூ.350 மானியம்... சற்றுமுன் முதல்வர் அறிவித்தார்..!

Tamizhan media 2 weeks ago

புதுச்சேரியில் சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியத்தை உயர்த்தி அம்மாநில முதலமைச்சர் என். ரங்கசாமி சட்டமன்ற பேரவையில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப அட்டையதாரர்களுக்கான சிலிண்டர் மானியம் மாதம் ரூ.300-ல் இருந்து ரூ.350 ஆகவும், ஏனைய பிற குடும்ப அட்டைதாரர்களுக்கான மானியம் ரூ.150-ல் இருந்து ரூ.200 ஆகவும் உயர்த்தப்பட்டு இனி வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 3 சமையல் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அறிவித்திருந்த சூழலில், புதுச்சேரி அரசின் இந்த அதிரடி மானிய உயர்வு அறிவிப்பு அம்மாநில மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamizhan media