தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுகளுக்காகச் சுமார் 6 லட்சம் பேர் நீண்ட நாட்களாகக் காத்திருக்கும் நிலையில், அவர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியளிக்கும் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் வெங்கடரமணன், தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு இன்னும் 2 அல்லது 3 வாரங்களில் புதிய ரேஷன் கார்டுகள் விநியோகிக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
ஸ்மார்ட் கார்டுகள் உடனடியாக வழங்கப்பட வேண்டும் எனப் பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த நிலையில், அமைச்சரின் இந்த அதிரடி அறிவிப்பு விண்ணப்பதாரர்கள் மத்தியில் பெரும் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

