தமிழக முதலமைச்சர் விஜய்யின் தேர்தல் வெற்றியை எதிர்த்து திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்குகளில், அவர் மீது பல்வேறு பரபரப்பு புகார்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாக்களிக்குமாறு தங்கள் குடும்பத்தினரை வற்புறுத்துமாறு குழந்தைகளிடம் அவர் வேண்டுகோள் விடுத்ததாகவும், இது குழந்தைகளை மறைமுகமாக பிளாக்மெயில் செய்யும் செயலாகக் கருதப்பட வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அவர் தனது இறுதி தேர்தல் பரப்புரையில் பேசிய வீடியோ ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ள திமுக, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி இது ஒரு கடுமையான தேர்தல் குற்றமாகும் என்று சுட்டிக்காட்டி, அவரது வெற்றியை செல்லாததாக்கக் கோரி சட்டப் போராட்டத்தைத் தீவிரப்படுத்தியுள்ளது.

