Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
மக்களே உஷார். மகளிர் உரிமைத்தொகை  ரூ 1,000 திடீர் நிறுத்தம்?.  காரணம் இதுதான்.!

மக்களே உஷார். மகளிர் உரிமைத்தொகை ரூ 1,000 திடீர் நிறுத்தம்?. காரணம் இதுதான்.!

Tamizhan media 1 week ago

டந்த சில மாதங்களாகத் தமிழகம் முழுவதும் பல ஆயிரம் பேருக்குக் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ரூ. 1,000 தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருப்பது குறித்துப் பிரபல நாளிதழ் ஒன்று சமீபத்தில் முக்கியச் செய்தி வெளியிட்டது.

இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளாக இருந்த பலரது வங்கிக் கணக்குகளில் ‘இ-கேஒய்சி’ எனப்படும் ஆதார் மற்றும் வங்கி விவரப் புதுப்பிப்புப் பணிகள் முறையாகச் செய்யப்படாததே இத்தொகை கைவிடப்பட்டதற்கான முக்கியக் காரணமாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தகுதியற்றவர்களை நீக்கும் அரசின் வடிப்பின் கீழ், பயனாளர்களின் குடும்பத்தில் அரசு ஊழியர்கள் அல்லது உள்ளாட்சி பிரதிநிதிகள் இருப்பது கண்டறியப்பட்டமையாலும் சிலரது பெயர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளன. எனவே, விடுபட்ட தகுதியான நபர்கள் தங்களது வங்கி கணக்குகளில் தேவையான ஆவணப் புதுப்பிப்புப் பணிகளை உடனடியாக நிறைவு செய்தால், மீண்டும் இத்தொகையைப் பெற வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamizhan media