Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
"மேடையில் நடந்த சத்தியம்".. 234 எம்.எல்.ஏ-க்களையும் அதிரவைத்த முதல்வர் விஜய். சபாநாயகர் பரபரப்பு பேச்சு..!

"மேடையில் நடந்த சத்தியம்".. 234 எம்.எல்.ஏ-க்களையும் அதிரவைத்த முதல்வர் விஜய். சபாநாயகர் பரபரப்பு பேச்சு..!

Tamizhan media 1 week ago

பாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் சமீபத்தில் கொடைக்கானல் கீழ்மலை கிராமத்தில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசினார்.

அப்போது, முதியோர் இல்லங்களில் வசிக்கும் பெற்றோர்களின் வேதனை நிறைந்த பின்னணிகளைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், பெற்று வளர்த்த பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் சேர்க்கும் நிலை நிச்சயம் மாற வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், வாழும் காலத்தில் பெற்றோர்களை மதிக்காமல், அவர்கள் மறைந்த பிறகு வருந்துவதில் எந்தவொரு பயனும் இல்லை என்பதால், இளைஞர்களும் மாணவர்களும் பெற்றோர்களைப் போற்றி மதிக்கும் உயரிய பண்பைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

குடும்ப உறவுகள் மற்றும் தற்கால சமூக மாற்றங்கள் குறித்து தொடர்ந்து உரையாற்றிய அவர், கணவன்-மனைவிக்கு இடையே பரஸ்பர புரிதலும் நட்புறவும் அவசியம் என்றார். முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு திருமணத்திற்குப் பின் பெண்கள் பல்வேறு கட்டுப்பாடுகளுக்குள் வைக்கப்பட்ட நிலை மாறியிருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், இக்காலகட்டத்தில் ஆணுக்குப் பெண் சமம் என்பதை கணவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றும், அதிகாரப் போக்கைத் தவிர்த்து விட்டு மனைவியின் கருத்துக்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

அரசியல் மற்றும் ஆட்சிமுறை மாற்றங்கள் குறித்துப் பேசுகையில், சாதியும் பணமும் மட்டுமே ஆட்சியைத் தீர்மானிக்கும் என்ற சூழலை தவெக ஆட்சி மாற்றியமைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 234 சட்டமன்ற உறுப்பினர்களும் வாக்களித்த மக்களுக்கு உண்மையாகவும் நேர்மையாகவும் உழைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, முதலமைச்சர் விஜய் அவர்கள் அனைவரையும் மேடையில் நிற்க வைத்து சத்தியப்பிரமாணம் செய்து வைத்தார் என்ற தகவலையும் அவர் பகிர்ந்துகொண்டார்.

இந்தியாவிலேயே எந்தவொரு முதலமைச்சரும் இதுபோன்று செய்ததில்லை என்று சுட்டிக்காட்டிய சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், மக்களுக்கு நேர்மையாகச் சேவை செய்வோம் எனச் செய்யப்பட்ட அந்த சத்தியத்தின் வழியிலேயே தற்போதைய ஆளுங்கட்சியினர் தங்கள் பணிகளைத் தொடர்ந்து செவ்வனே செய்து வருகின்றனர் என்று கூறித் தன் உரையை நிறைவு செய்தார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamizhan media