கூட்டுறவு மற்றும் பொதுத்துறை வங்கிகளில் பொதுமக்கள் பெற்றுள்ள நகைக்கடன்கள் குறித்த விவரங்களை தமிழ்நாடு அரசு தீவிரமாகச் சேகரித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த திடீர் நடவடிக்கை பொதுமக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, விரைவில் அரசு தரப்பிலிருந்து சர்ப்ரைஸாக ஒரு ‘நகைக்கடன் தள்ளுபடி’ அறிவிப்பு வெளியாகலாம் என்ற பேச்சுகளும் பரவலாக எழுந்துள்ளன.
குறிப்பாக, ஏழை மற்றும் நடுத்தர மக்களின் சுமையைக் குறைக்கும் வகையில் 5 சவரன் வரையிலான நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படும் நிலையில், இதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை தமிழக அரசிடமிருந்து வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

