Dailyhunt
"நல்ல மனசுக்காரன்யா நீ" ஆட்சி பொறுப்பேற்கும் முன்பே இப்படியா..? "மக்கள் பிரச்சினையோடு வந்தால்" MLA-க்களுக்கு விஜய் போட்ட முதல் உத்தரவு..!!

"நல்ல மனசுக்காரன்யா நீ" ஆட்சி பொறுப்பேற்கும் முன்பே இப்படியா..? "மக்கள் பிரச்சினையோடு வந்தால்" MLA-க்களுக்கு விஜய் போட்ட முதல் உத்தரவு..!!

Tamizhan media 1 week ago

மிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், தேர்தலில் வெற்றி பெற்ற தனது கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முதல் உத்தரவை பிறப்பித்துள்ளார்.

மக்களின் பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வு காணும் வகையில் தவெக எம்.எல்.ஏ-க்கள் செயல்பட வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார். தேர்தல் வெற்றிக்குப் பிறகு நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், மக்களின் நம்பிக்கையைக் காப்பாற்றும் வகையில் கடமையாற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து சிவகாசி தொகுதி தவெக எம்.எல்.ஏ கீர்த்தனா பேசுகையில், மக்கள் எந்தப் பிரச்சினையுடன் வந்தாலும் அதனை உடனே தீர்த்து வைக்க வேண்டும் என்று விஜய் தங்களுக்குக் கட்டளையிட்டுள்ளதாகத் தெரிவித்தார். மக்கள் குறைகளைத் தீர்ப்பதற்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற விஜய்யின் இந்த அதிரடி உத்தரவு, தவெக தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆட்சிப் பொறுப்பை ஏற்பதற்கு முன்பே மக்கள் நலனில் அக்கறை காட்டும் விஜய்யின் இந்தச் செயல் அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamizhan media