Dailyhunt
நம்பிக்கைத் துரோகம் செய்யும் புதின்.? போர்நிறுத்தம் அறிவித்த சில மணிநேரங்களில் நடந்த பகீர் சம்பவம். அமைதி பேச்சுவார்த்தை வெறும் நாடகம் ..!!!

நம்பிக்கைத் துரோகம் செய்யும் புதின்.? போர்நிறுத்தம் அறிவித்த சில மணிநேரங்களில் நடந்த பகீர் சம்பவம். அமைதி பேச்சுவார்த்தை வெறும் நாடகம் ..!!!

Tamizhan media 1 week ago

ரண்டாம் உலகப் போர் வெற்றி தினக் கொண்டாட்டங்களை முன்னிட்டு ரஷ்யா போர்நிறுத்தத்திற்குத் தயாராகி வருவதாக அறிவித்திருந்த நிலையில், உக்ரைன் மீது 100-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவி ரஷ்ய ராணுவம் கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளது.

குறிப்பாகச் சுமி மற்றும் கார்கிவ் பகுதிகளில் பொதுமக்கள் வசிக்கும் இடங்களைக் குறிவைத்து இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. ரஷ்யாவின் இந்தச் செயல் சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தாக்குதலுக்கு உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். உக்ரைன் முன்மொழிந்த போர்நிறுத்த ஒப்பந்தத்தை ரஷ்யா மதிக்கவில்லை என்றும், சில மணிநேரங்களிலேயே ஆயிரக்கணக்கான முறை அத்துமீறல்கள் நடந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அமைதி குறித்துப் பேசுவது ரஷ்யாவின் நாடகம் என்றும், அதன் உண்மையான நோக்கம் ஆக்கிரமிப்பு மட்டுமே என்பதை இந்தத் தாக்குதல்கள் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

ரஷ்யா தனது வெற்றி தின ராணுவ அணிவகுப்பைப் பாதுகாப்பாக நடத்துவதற்காக மட்டுமே தற்காலிகப் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்துவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. ரஷ்ய அதிபர் புதின் மனித உயிர்களை விட ராணுவ அணிவகுப்புகளுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கிறார் எனத் தெரிவித்துள்ள உக்ரைன் அரசு, இந்தத் துரோகச் செயலுக்குத் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்துள்ளது. இந்த மோதலால் அப்பகுதியில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamizhan media