Dailyhunt
"நான் சீக்கிரமாக அரியணை ஏறுவேன்" அரசியலுக்கு வரும் திரிஷா..? அந்த ஒரு போஸ்டால் அதிர்ச்சியில் திரையுலகம்..!!

"நான் சீக்கிரமாக அரியணை ஏறுவேன்" அரசியலுக்கு வரும் திரிஷா..? அந்த ஒரு போஸ்டால் அதிர்ச்சியில் திரையுலகம்..!!

Tamizhan media 3 days ago

தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையான த்ரிஷா, தனது பிறந்தநாளையொட்டி (மே 4) சமூக வலைதளத்தில் பதிவிட்ட ஒரு பதிவு தற்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவர் தனது ‘MAY-ME’ பதிவில், “You Should See Me In A Crown” என்ற பாடலை இணைத்துள்ளார். இந்தப் பாடலின் வரிகள் “நான் சீக்கிரமாக அரியணை ஏறுவேன்” என்ற பொருளைக் குறிப்பதால், த்ரிஷா விரைவில் அரசியலில் நுழையத் திட்டமிட்டுள்ளாரோ என்ற சந்தேகம் அவரது ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

த்ரிஷாவின் இந்தப் பதிவைப் பார்த்த பலரும், அவர் அரசியலுக்கு வரும் எண்ணம் இருப்பதாலேயே இத்தகைய சூசகமான பதிவை வெளியிட்டுள்ளதாகக் கூறி வருகின்றனர். தமிழ் சினிமாவில் இருந்து பல முன்னணி நட்சத்திரங்கள் அரசியலுக்குத் தடம் பதித்து வரும் நிலையில், த்ரிஷாவின் இந்தத் திடீர் ‘க்ரவுன்’ பதிவு அரசியல் வட்டாரத்தில் புதிய சர்ச்சையையும் எதிர்பார்ப்பையும் கிளப்பியுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamizhan media