திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், சிவா மற்றும் அவர்களது நண்பர் ஆகியோர் சேர்ந்து, 40 வயதுடைய பெண் ஒருவரை ஆள் நடமாட்டமில்லாத தனிமையான காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு வைத்து அந்தப் பெண்ணைச் சூழ்ந்து கொண்ட அக்கும்பல், அவரை மிரட்டிப் பலவந்தமாக ஆடையின்றி நிர்வாணமாக்கியுள்ளது.
பின்னர் தங்களது செல்போன்களில் ஆபாசமாகப் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துக்கொண்டு, “நாங்கள் சொல்வதைக் கேட்காவிட்டால் புகைப்படங்களைச் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவோம்” என மிரட்டியுள்ளனர். மேலும் அந்தப் பெண் அணிந்திருந்த தங்க நகைகள் மற்றும் செல்போனைப் பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.
இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் உடனடியாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்திய நெல்லை போலீசார், பெண்ணை மிரட்டி ஆபாச படம் எடுத்து நகை பறித்த மணிகண்டன், சிவா உட்பட 3 பேரைக் கைது செய்தனர். அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மற்றும் குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

