Dailyhunt
"நன்றி கெட்ட ஜென்மங்கள்" எங்களுக்கு எந்த கவலையும் இல்லை. காங்கிரஸை சாடிய ஆர்.எஸ். பாரதி..!!

"நன்றி கெட்ட ஜென்மங்கள்" எங்களுக்கு எந்த கவலையும் இல்லை. காங்கிரஸை சாடிய ஆர்.எஸ். பாரதி..!!

Tamizhan media 1 week ago

கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி விலகியது குறித்து தனக்கு எந்தவித கவலையும் இல்லை என்று திமுகவின் ஆர்.எஸ்.

பாரதி தெரிவித்துள்ளார். 'இந்தியா' கூட்டணியில் இறுதிவரை உறுதியாக நீடித்த திமுகவை விட்டு காங்கிரஸ் சென்றிருப்பதால், அவர்களை “நன்றி கெட்டவர்கள்” என்று அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

கூட்டணி முறிவு தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் உங்களிடம் பேசினார்களா என்ற கேள்விக்கு, “தலைக்கு மேல் வெள்ளம் போன பின்பு, ஜான் என்ன முழம் என்ன” என்ற பழமொழியை மேற்கோள் காட்டி ஆர்.எஸ். பாரதி பதிலளித்துள்ளார். இதன் மூலம் பேச்சுவார்த்தைக்கான சூழல் கடந்துவிட்டதை அவர் மறைமுகமாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், வரும் எதிர்காலத்தில் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து அரசியல் செய்வோம் என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இதன் மூலம் திமுக மற்றும் காங்கிரஸ் இடையிலான கூட்டணி உறவு அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துள்ளதையும், இனி வரும் காலங்களில் இரு கட்சிகளுக்கும் இடையே அரசியல் மோதல் இருக்கும் என்பதையும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamizhan media