Dailyhunt
"நரகமாகும் ஈரான்?". டிரம்ப் கொடுத்த 48 மணி நேர கெடு. நடுங்கும் உலக நாடுகள். விடிய விடிய பெய்த ஏவுகணை மழை. பற்றி எரியும் மத்திய கிழக்கு நாடுகள்..!!!

"நரகமாகும் ஈரான்?". டிரம்ப் கொடுத்த 48 மணி நேர கெடு. நடுங்கும் உலக நாடுகள். விடிய விடிய பெய்த ஏவுகணை மழை. பற்றி எரியும் மத்திய கிழக்கு நாடுகள்..!!!

Tamizhan media 5 days ago

ரான் நகரங்கள் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நடத்திய அதிரடி ஏவுகணைத் தாக்குதல்களில் குறைந்தது 25 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஹோர்முஸ் நீரிணையை 48 மணி நேரத்திற்குள் திறக்க வேண்டும், இல்லையெனில் ஈரானை “நரகத்திற்கு அனுப்புவோம்” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்த கடும் எச்சரிக்கையைத் தொடர்ந்து இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.

மேலும் ஈரானின் குடியிருப்புப் பகுதிகள் மற்றும் ஒரு பல்கலைக்கழகத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலால் தலைநகர் தெஹ்ரானின் பல பகுதிகளில் எரிவாயு விநியோகம் தடைபட்டுள்ளதோடு, பெரும் சேதங்களும் ஏற்பட்டுள்ளன.

இதனால் டிரம்பின் காலக்கெடுவை ஈரான் திட்டவட்டமாக நிராகரித்துள்ளதோடு, அமெரிக்காவின் மிரட்டலுக்குப் பணியப் போவதில்லை என்றும் அறிவித்துள்ளது. இதற்குப் பதிலடியாக ஈரான் நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் தரப்பில் இருவர் பலியானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்தால், பிராந்தியம் முழுவதும் மிகப்பெரிய பேரழிவைச் சந்திக்கும் வகையில் எங்களின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் அமையும் என்று ஈரான் அரசு எச்சரித்துள்ளது. இந்த மோதல் போக்கினால் மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamizhan media