Dailyhunt
நீங்கள் பிரெஷரா!. ரூ.21 லட்சம் வரை சம்பளம்.. அனுபவம் தேவையில்லை.. இன்போசிஸ் பணிக்கு ஏப்ரல் 13 கடைசி நாள். உடனே அப்ளை பண்ணுங்க.!!

நீங்கள் பிரெஷரா!. ரூ.21 லட்சம் வரை சம்பளம்.. அனுபவம் தேவையில்லை.. இன்போசிஸ் பணிக்கு ஏப்ரல் 13 கடைசி நாள். உடனே அப்ளை பண்ணுங்க.!!

Tamizhan media 1 week ago

பிரபல ஐடி நிறுவனமான இன்போசிஸ் (Infosys), 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் கல்லூரி படிப்பை முடித்த பிரெஷர்களுக்காக (Freshers) ஒரு பிரம்மாண்ட வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதில் ஸ்பெஷலிஸ்ட் புரோகிராமர் (L1, L2, L3) மற்றும் டிஜிட்டல் ஸ்பெஷலிஸ்ட் இன்ஜினியர் என மொத்தம் நான்கு விதமான தொழில்நுட்பப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அனுபவம் இல்லாத பட்டதாரிகள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி முன்னணி நிறுவனத்தில் தங்கள் பணியைத் தொடங்கலாம்.

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க பி.இ, பி.டெக், எம்.இ, எம்.டெக், எம்.சி.ஏ அல்லது 5 ஆண்டு ஒருங்கிணைந்த எம்.எஸ்சி முடித்திருக்க வேண்டும். குறிப்பாக கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐடி, ஏஐ/எம்எல், சைபர் செக்யூரிட்டி, இசிஇ, ட்ரிபிள்இ போன்ற துறைகளில் பட்டம் பெற்றவர்கள் தகுதியானவர்கள். இதில் ஸ்பெஷலிஸ்ட் புரோகிராமர் L3 பதவிக்கு ஆண்டுக்கு ரூ.21 லட்சம் வரையும், L2 பதவிக்கு ரூ.16 லட்சம் வரையும், L1 பதவிக்கு ரூ.10 லட்சம் வரையும் அதிகப்பட்ச ஊதியம் வழங்கப்படுகிறது. டிஜிட்டல் ஸ்பெஷலிஸ்ட் இன்ஜினியர் பணிக்கு ஆண்டுக்கு ரூ.6.26 லட்சம் சம்பளத்துடன் ரூ.75,000 ஜாயினிங் போனஸும் உண்டு.

தேர்வு முறையானது இரண்டு முக்கிய நிலைகளைக் கொண்டது. முதல் சுற்றில் ஆன்லைன் வழியிலான எழுத்துத் தேர்வு (Written Assessment) நடைபெறும். அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு இரண்டாம் சுற்றில் 3 மணிநேரம் நீடிக்கக்கூடிய நேரடித் தேர்வு மற்றும் நேர்காணல் (In Person Assessment + Interview) நடத்தப்படும். இது முற்றிலும் புரோகிராமிங் திறனைச் சோதிக்கும் வகையில் அமையும். தகுதியுள்ள விண்ணப்பத்தாரர்கள் ஏப்ரல் 13-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என்று இன்போசிஸ் தெரிவித்துள்ளது.

விண்ணப்பிப்பவர்களுக்கு இரண்டு முக்கிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. கடந்த 6 மாதங்களில் இன்போசிஸ் நடத்திய எந்தவொரு நேர்காணலிலும் பங்கேற்றிருக்கக் கூடாது என்பது முதல் நிபந்தனை. அதேபோல், தற்போது ஏற்கனவே இன்போசிஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருபவர்கள் இந்தத் தேர்வில் பங்கேற்க அனுமதி இல்லை. ஒரு சிறந்த தொழில் வாழ்க்கையைத் தொடங்க விரும்பும் இளம் பொறியாளர்களுக்கு இந்த வேலைவாய்ப்பு ஒரு மிகச்சிறந்த வாய்ப்பாகும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamizhan media