Dailyhunt
நீங்கள் தினமும் பயன்படுத்தும் ஸ்பாஞ்சில் இத்தனை கோடி பாக்டீரியாக்களா?. கிச்சன் ஸ்பாஞ்சில் ஒளிந்திருக்கும் 'சைலண்ட் கில்லர்' . அதிர்ச்சி தகவல்.!!!

நீங்கள் தினமும் பயன்படுத்தும் ஸ்பாஞ்சில் இத்தனை கோடி பாக்டீரியாக்களா?. கிச்சன் ஸ்பாஞ்சில் ஒளிந்திருக்கும் 'சைலண்ட் கில்லர்' . அதிர்ச்சி தகவல்.!!!

Tamizhan media 1 week ago

மையலறையில் பாத்திரங்களைக் கழுவப் பயன்படுத்தப்படும் ஸ்பாஞ்ச், பார்ப்பதற்குச் சுத்தமாகத் தெரிந்தாலும், அதில் லட்சக்கணக்கான கண்ணுக்குத் தெரியாத பாக்டீரியாக்கள் ஒளிந்திருக்கக்கூடும்.

ஈரப்பதம் நிறைந்த ஸ்பாஞ்ச் பாக்டீரியாக்கள் வளர்வதற்கு ஏற்ற இடமாக இருப்பதால், இதனை முறையாகப் பராமரிப்பது அவசியம். ஒரு ஸ்பாஞ்சை ஒரு வாரத்திற்கு மேல் பயன்படுத்துவது ஆரோக்கியத்திற்குப் பாதுகாப்பானது அல்ல என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

குறிப்பாக, ஸ்பாஞ்சிலிருந்து ஏதேனும் துர்நாற்றம் வீசினாலோ அல்லது அதன் நிறம் மாறத் தொடங்கினாலோ, யோசிக்காமல் உடனடியாக அதை மாற்றிவிடுவது நல்லது. ஸ்பாஞ்சில் இருக்கும் கிருமிகளை நீக்க அவ்வப்போது வெந்நீரில் நனைத்தோ அல்லது மைக்ரோவேவ் அடுப்பில் வைத்தோ சுத்தப்படுத்தலாம்.

இருப்பினும், இது தற்காலிகமான தீர்வே தவிர, நீண்ட காலத்திற்குப் பழைய ஸ்பாஞ்சையே பயன்படுத்துவது உணவு நச்சுத்தன்மை போன்ற உடல்நலக் கோளாறுகளுக்கு வழிவகுக்கும். எனவே, குறைந்தபட்சம் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறையாவது புதிய ஸ்பாஞ்சைப் பயன்படுத்துவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். மேலும், சமையல் மேடையைத் துடைப்பதற்கும், பாத்திரங்களைக் கழுவுவதற்கும் தனித்தனி ஸ்பாஞ்ச்களைப் பயன்படுத்துவது கிருமிகள் பரவுவதைத் தடுக்க உதவும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamizhan media