Dailyhunt
ஒன்னு செத்துப்போச்சி. ஒன்னு அமித்ஷாவின் மார்வாடி கடையில அடமானத்துல இருக்கு. அதிமுகவை நார் நாராக கிழித்த கருணாஸ்.!!

ஒன்னு செத்துப்போச்சி. ஒன்னு அமித்ஷாவின் மார்வாடி கடையில அடமானத்துல இருக்கு. அதிமுகவை நார் நாராக கிழித்த கருணாஸ்.!!

Tamizhan media 1 week ago

சிவகங்கையில் நடைபெற்ற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் உரையாற்றிய நடிகர் கருணாஸ், அதிமுக மற்றும் பாஜக கூட்டணியைக் கடுமையாகச் சாடினார்.

“தாமரை மலருக்குக் கீழே இரட்டை இலை படுத்துத் தூங்கிக் கொண்டிருக்கிறது” என்று விமர்சித்த அவர், ஒரு இலை அமித்ஷா எனும் மார்வாடி கடையிடம் அடமானத்திற்குப் போய்விட்டதாகவும், மற்றொரு இலை இத்துப்போன ஒருவரிடம் சிக்கி ‘செத்த இலையாக’ மாறிவிட்டதாகவும் பகீர் விமர்சனத்தை முன்வைத்தார். சிவகங்கை தொகுதியில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று, முந்தைய அதிமுக எம்எல்ஏ செய்யத் தவறிய வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றுவேன் என்றும் அவர் உறுதி அளித்தார்.

பெரம்பலூர் (தனி) சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஏற்கனவே ஜான்சி ராணி என்பவர் ஏர்கலப்பை சின்னத்துடன் ஊர்வலமாகச் சென்று வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், நேற்று திடீர் திருப்பமாக அதே கட்சியின் சார்பில் சுகன்யா என்பவர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்தார். சீமானின் உத்தரவுப்படியே தான் போட்டியிடுவதாகச் சுகன்யா அறிவித்தது கட்சியினரிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் இரண்டு பேர் மனுத்தாக்கல் செய்துள்ள இந்தத் திடீர் வேட்பாளர் மாற்றத்தால் கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. முதலில் மனுத்தாக்கல் செய்த ஜான்சி ராணிக்கான வாய்ப்பு பறிக்கப்பட்டதால், அவரது ஆதரவாளர்கள் கட்சித் தலைமை மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். தேர்தல் நெருங்கும் வேளையில் சிவகங்கையில் கருணாஸின் காரசாரமான பேச்சும், பெரம்பலூரில் நாம் தமிழர் கட்சியின் உட்கட்சி குழப்பமும் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamizhan media