Dailyhunt
ஒன்றுமே தெரியாதது போல் பாவனை செய்கிறார் முதலமைச்சர்.. எல்பிஜி விவகாரத்தில் சுந்தர்.சி கடும் சாடல்..!!

ஒன்றுமே தெரியாதது போல் பாவனை செய்கிறார் முதலமைச்சர்.. எல்பிஜி விவகாரத்தில் சுந்தர்.சி கடும் சாடல்..!!

Tamizhan media 5 days ago

மிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், மதுரை மத்திய தொகுதி வேட்பாளரும் இயக்குநருமான சுந்தர்.சி சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், எல்பிஜி (LPG) எரிவாயு விலை உயர்வு குறித்துப் பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் கேள்வி எழுப்புவதைச் சுட்டிக்காட்டியுள்ளார். “நமது பிரதமர் மோடியிடம் எரிவாயு எங்கே என்று ஒரு முதலமைச்சர் கேட்கிறார்; இதுகுறித்து அவருக்கு எதுவுமே தெரியாதது போல் பாவனை செய்கிறார்” என்று சுந்தர்.சி தனது பதிவில் கடுமையாகச் சாடியுள்ளார்.

மேலும், எல்பிஜி என்பது பிரதமர் மோடியின் தனிப்பட்ட கருவூலம் அல்ல என்பதை முதலமைச்சர் உணர வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது மேற்கு ஆசிய நாடுகளில் போர் உச்சத்தில் இருப்பதால், எரிவாயு விநியோகம் மற்றும் விலை தொடர்பான சிக்கல்கள் உலகம் முழுவதும் நிலவி வரும் ஒரு சர்வதேசப் பிரச்சினை என்று சுந்தர்.சி விளக்கமளித்துள்ளார். உலகளாவிய பொருளாதாரச் சூழலை மறைத்துவிட்டு, அரசியல் லாபத்திற்காகப் பிரதமரைக் குறை கூறுவது முறையல்ல என்ற தொனியில் அவரது கருத்துக்கள் மதுரை அரசியல் வட்டாரத்தில் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamizhan media