Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ஊத்தங்கரை தவெக MLA-விடம் 35 கோடி குதிரை பேரம். திருநாவுக்கரசு கைதான பின்னணி. அதிர்ந்த தமிழக அரசியல்.!

ஊத்தங்கரை தவெக MLA-விடம் 35 கோடி குதிரை பேரம். திருநாவுக்கரசு கைதான பின்னணி. அதிர்ந்த தமிழக அரசியல்.!

Tamizhan media 1 week ago

முன்னாள் லயோலா கல்லூரி மாணவர் என்ற போர்வையில், கடந்த ஜனவரி மாதம் ஐடிபிஎஸ் தலைவர் திருநாவுக்கரசு வெளியிட்ட கருத்துக்கணிப்பு என்பது வெறும் தேர்தல் ஆய்வு அல்ல; அது தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது அவர் திட்டமிட்டு கக்கிய வன்மம் என்பது தற்போது வெட்டவெளிச்சமாகியுள்ளது.

விஜய்க்குப் பின்னால் அரசியல் அனுபவமில்லாத கூட்டமே இருக்கிறது என்றும், அவருக்கு எம்ஜிஆர் அளவுக்குப் புகழ் இல்லை என்றும், தவெக 15 சதவீத வாக்குகளைக் கூடத் தாண்டாது என்றும் ஆணவத்தோடு அவர் அன்று குறிப்பிட்டார். விஜய்யின் அரசியல் வருகையை ஒரு ‘பொய்யான பிம்பம்’ எனச் சாடிய திருநாவுக்கரசுவின் முகத்திரை, இன்று மக்கள் தீர்ப்பின் மூலம் கிழிக்கப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளில், மக்களின் பேராதரவோடு 108 தொகுதிகளில் சிங்கமாய் வென்று சிம்மாசனத்தில் அமர்ந்துள்ளார் தலைவர் விஜய். திருநாவுக்கரசுவின் அத்தனை போலிப் பிரச்சாரங்களையும், கணிப்புகளையும் தவிடுபொடியாக்கி தவெக படைத்த இந்த இமாலய சாதனை, மக்கள் விஜய்யின் கொள்கை பக்கமே நிற்கிறார்கள் என்பதை ஆணித்தரமாக நிரூபித்துள்ளது. தன் கணிப்பு முழுக்கப் பொய்யாகிப் போனதால் ஏற்பட்ட அசுரத்தனமான ஆத்திரத்திலும், தோல்வி பயத்திலும் இருந்த திருநாவுக்கரசு, எப்படியாவது விஜய் தலைமையிலான புதிய ஆட்சியைச் சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கில் அடுத்த சதித்திட்டத்தைத் தீட்டத் தொடங்கினார்.

இதன் பின்னணியில், செந்தில் பாலாஜியின் விசுவாசக் கையாளாக மாறிய திருநாவுக்கரசு, தவெக எம்எல்ஏ-க்களை விலைக்கு வாங்கி ஆட்சியை கவிழ்க்கும் நோக்கில் குதிரை பேரத்தில் இறங்கினார். மாண்புமிகு ஊத்தங்கரை தொகுதி தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம், ஒரு எம்எல்ஏ-வுக்கு தலா 35 கோடி ரூபாய் தருவதாக ஆசைவார்த்தை கூறி, மிரட்டிய புகாரில் தான் தற்போது திருநாவுக்கரசு அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். கருத்துக்கணிப்பு என்ற பெயரில் நடுநிலையானவர் போல வேடமிட்டு, திரைமறைவில் அரசியல் லாபத்திற்காக எதையும் செய்யத் துணியும் இத்தகைய நபர்களின் நிஜ சொரூபம் இப்போது சட்டத்தின் முன் அம்பலமாகியுள்ளது.

ஒருகாலத்தில் விஜய்யை ‘பொய்யான பிம்பம்’ என்று வசைபாடிய திருநாவுக்கரசு, இன்று ரூ.35 கோடி பேரம் பேசி சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் தள்ளப்பட்டதன் மூலம், யார் இங்கு பொய்யான பிம்பம் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. மக்கள் பலமும், தார்மீக நேர்மையும் கொண்ட மாண்புமிகு முதலமைச்சர் விஜய்யின் ஆட்சியை, இதுபோன்ற சதித்திட்டங்களாலோ அல்லது பண பலத்தாலோ அசைக்க முடியாது என்பதை இந்த கைது நடவடிக்கை அரசியல் எதிரிகளுக்கு பலத்த எச்சரிக்கையாக விடுத்துள்ளது. தவெகவின் இந்த இமாலய வெற்றியும், சதிகாரர்களின் வீழ்ச்சியும் தமிழக அரசியலில் ஒரு புதிய நேர்மையான சகாப்தத்தின் துவக்கமாகும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamizhan media