Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
"ஒருத்தனையும் விடாதீங்க. கரூர் கம்பெனிக்கு எண்ட் கார்டு?. முதல்வர் விஜய்யின் அதிரடி நடவடிக்கை.!"

"ஒருத்தனையும் விடாதீங்க. கரூர் கம்பெனிக்கு எண்ட் கார்டு?. முதல்வர் விஜய்யின் அதிரடி நடவடிக்கை.!"

Tamizhan media 1 week ago

மிழக அரசியலில் 'கரூர் கம்பெனி' விவகாரம் பெரும் புயலைக் கிளப்பி வரும் நிலையில், தமிழக முதல்வர் விஜய் இந்த விஷயத்தில் மிகவும் தீவிரமான முடிவை எடுத்திருப்பதாகத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

“யாராக இருந்தாலும் சரி, அத்தனை ஆதாரங்களையும் உடனடியாகத் திரட்டி வெளியே கொண்டு வாருங்கள்” என்று அதிகாரிகளுக்கு அவர் அதிரடி உத்தரவிட்டுள்ளாராம். மேலும், இது தொடர்பாகப் புகார் அளிக்கப் பயப்படும் நபர்களுக்கு முழு பாதுகாப்பு மற்றும் தைரியம் அளித்து, உடனடியாக வழக்குகள் பதிவு செய்ய வேண்டும் என்றும், தவறு செய்தவர்கள் யாரையும் தப்ப விடக்கூடாது என்பதில் அவர் உறுதியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

குறிப்பாக டாஸ்மாக் நிர்வாகம், பார் உரிமையாளர்கள் மற்றும் இதற்குப் பின்னணியில் இருக்கும் முக்கியப் புள்ளிகள் வரை அனைவரையும் வரிசையாக விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர உத்தரவுகள் பறக்கின்றனவாம். தற்போதைய முதல்வரின் இந்த அதிரடி நடவடிக்கைகளைப் பார்க்கும் போது, இந்த விவகாரத்தில் தொடர்புடைய மொத்தப் பேரையும் சட்டத்தின் முன் நிறுத்தி சிறையில் தள்ளாமல் அவர் ஓய்வெடுக்க மாட்டார் போலத் தான் தெரிகிறது. இந்த அதிரடி உத்தரவுகள், தற்போதைய அரசியல் வட்டாரத்திலும் அரசு அதிகாரிகள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamizhan media