Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ரேஷன் கார்டுதாரர்களுக்கு வரப்போகும் ஆபத்து. தமிழகத்தில் மட்டும் 70 லட்சம் பேர் பாதிப்பா?. மத்திய அரசுக்கு எதிராக கிளம்பும் புதிய புயல்..!

ரேஷன் கார்டுதாரர்களுக்கு வரப்போகும் ஆபத்து. தமிழகத்தில் மட்டும் 70 லட்சம் பேர் பாதிப்பா?. மத்திய அரசுக்கு எதிராக கிளம்பும் புதிய புயல்..!

Tamizhan media 4 days ago

த்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள உணவு பாதுகாப்புச் சட்ட திருத்தம் ஏழைகளின் வாழ்வாதாரத்தை கடுமையாகப் பாதிக்கும் என்பதால், அதனை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் (CPI) மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (CPM) கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

இத்திருத்தம் நடைமுறைக்கு வந்தால் தமிழகத்தில் மட்டும் சுமார் 70 லட்சம் ஏழை எளிய மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் சண்முகம் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், தற்போதைய நிலையில் தகுதிவாய்ந்த குடும்பங்களுக்கு நியாயவிலைக் கடைகள் மூலம் தங்குதடையின்றி வழங்கப்பட்டு வரும் அத்தியாவசிய உணவுப் பொருள்களின் அளவை இந்த புதிய திருத்தம் பெருமளவில் குறைக்க வழிவகை செய்வதாக CPM மாநிலத் தலைவர் வீரபாண்டியன் கடுமையாகச் சாடியுள்ளார். ஏழை மக்களின் உணவை தட்டிப்பறிக்கும் இத்தகைய மக்கள் விரோத நடவடிக்கைகளை மத்திய அரசு கைவிட்டு, பொது விநியோகத் திட்டத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்பதே இக்கட்சிகளின் ஒட்டுமொத்த கோரிக்கையாக உள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamizhan media