Dailyhunt
ஸ்டாலின் கொடுத்த மெகா ஆஃபர்.. வேண்டாம் என்று மறுத்த திருமாவளவன்?. பின்னணியில் இருக்கும் பகீர் உண்மை...!

ஸ்டாலின் கொடுத்த மெகா ஆஃபர்.. வேண்டாம் என்று மறுத்த திருமாவளவன்?. பின்னணியில் இருக்கும் பகீர் உண்மை...!

Tamizhan media 1 week ago

மிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் குறித்து எழுப்பப்பட்ட விமர்சனங்களுக்கு அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் நெகிழ்ச்சியான விளக்கத்தை அளித்துள்ளார்.

காட்டுமன்னார்கோவில் தொகுதியில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அவர், திமுக கூட்டணியில் உள்ள 23 கட்சிகளையும் அரவணைத்துச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் இருப்பதை ஒரு கூட்டணிக் கட்சித் தலைவராகத் தான் உணர்ந்ததாகக் குறிப்பிட்டார். அதனால் தான், தொகுதிகளுக்காக பிடிவாதம் பிடிக்காமல் கூட்டணிக் கட்டுக்கோப்பை காக்க முன்னுரிமை அளித்ததாகத் தெரிவித்தார்.

இரட்டை இலக்கத் தொகுதிகளை எதிர்பார்த்த நிலையில், 8 தொகுதிகளுக்கு ஏன் சம்மதித்தேன் என்பது குறித்துப் பேசிய திருமாவளவன், “முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் 7 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் தருவதாகக் கூறினார். ஆனால், கடந்த முறையே 7 தொகுதிகளைப் பிரித்துக் கொடுப்பதற்குள் பெரும் போராட்டமே நடந்துவிட்டது,” என்று வெளிப்படையாகப் பேசினார். விசிகவில் அதிகாரப் பங்கீடு குறித்த விழிப்புணர்வைத் தானே ஏற்படுத்தியதால், தற்போது 8 தொகுதிகளுக்கு சுமார் 2,050 பேர் விருப்ப மனு அளிக்கும் அளவிற்குப் போட்டி நிலவுவதையும், இது தனக்கு மிகுந்த மன அழுத்தத்தைக் கொடுத்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.

தன்னைப் பற்றி சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரத்திலும் எழும் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்த அவர், “இரட்டை இலக்க சீட் இல்லையென்றால் வெளியில் போகிறேன் என்று மிரட்டும் அரசியல் எனக்குத் தெரியாது,” என்று திட்டவட்டமாகக் கூறினார். திமுகவுக்கு விசிக ‘கொத்தடிமை’யாக இருப்பதாகக் கூறுபவர்களுக்குப் பதிலளித்த அவர், கலைஞர் காலம் முதல் இப்போது வரை திமுகவில் யாரும் தன்னை இப்படித்தான் பேச வேண்டும் என்றோ, செயல்பட வேண்டும் என்றோ அழுத்தம் கொடுத்ததில்லை என்றும், தனக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

தேமுதிக மற்றும் எஸ்டிபிஐ போன்ற கட்சிகளின் வரவால் கூட்டணிச் சூழல் மாறியதை உணர்ந்து, விசிக ஒரு பொறுப்புள்ள கட்சியாகத் தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டதாக அவர் விளக்கினார். வெறும் தேர்தல் வெற்றியை மட்டும் குறிக்கோளாகக் கொள்ளாமல், மதச்சார்பற்ற சக்திகளின் ஒற்றுமையே பிரதானம் என்பதில் உறுதியாக இருப்பதாகவும், இதற்காகத் தான் தானாக முன்வந்து 8 தொகுதிகளுக்குச் சம்மதம் தெரிவித்து கையெழுத்திட்டதாகவும் திருமாவளவன் தனது உரையில் குறிப்பிட்டார். இது தொண்டர்களிடையே அவரது அரசியல் முதிர்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக அமைந்தது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamizhan media