Dailyhunt
ஸ்டாலினுக்கு அடுத்த அடி. திமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் திடீர் விலகல். அரசியலில் அதிரடி திருப்பம்..!

ஸ்டாலினுக்கு அடுத்த அடி. திமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் திடீர் விலகல். அரசியலில் அதிரடி திருப்பம்..!

Tamizhan media 2 weeks ago

திமுகவின் கொள்கை பரப்பு துணைச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான Dr. விஜய், கட்சியிலிருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் தனக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தபோதிலும், கட்சியின் சில முக்கிய நிர்வாகிகளின் சதியால் தனக்கு போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதாக அவர் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.

அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்த பிறகு, கட்சியின் வளர்ச்சிக்காக தான் வழங்கிய கடுமையான உழைப்பிற்கு தகுந்த அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார். உழைப்புக்கு ஏற்ற பலன் இல்லாத இடத்தில் நீடிக்க விரும்பவில்லை எனக் கூறி அவர் எடுத்துள்ள இந்த முடிவு, தற்போது திமுகவில் ஒருவித சலசலப்பை உருவாக்கியுள்ளதோடு, வரும் தேர்தல் களத்தில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தும் என்ற விவாதத்தையும் கிளப்பியுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamizhan media