Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
சீனா கொடுத்த 72 மணி நேர 'ரெட் அலர்ட்'.. அணைய உடைக்கும் மாபெரும் ஆபத்து.. நேபாளத்தில் மீண்டும் பேரழிவு.. அதிகாலையிலேயே ஷாக்.!

சீனா கொடுத்த 72 மணி நேர 'ரெட் அலர்ட்'.. அணைய உடைக்கும் மாபெரும் ஆபத்து.. நேபாளத்தில் மீண்டும் பேரழிவு.. அதிகாலையிலேயே ஷாக்.!

Tamizhan media 2 weeks ago

சீனா - நேபாள எல்லைப் பகுதியில் அண்மையில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு காரணமாக, அங்குள்ள ஆற்றுப் பாதையில் ஒரு பிரம்மாண்ட இயற்கை தடுப்பு ஏரி திடீரென உருவாகியுள்ளது.

தற்போதைய சூழலில் இந்த ஏரி வேகமாக நிரம்பி வழிவதைத் தொடர்ந்து, அடுத்த 72 மணி நேரத்திற்குள் இயற்கை அணை உடைந்து 2-ம் கட்டப் பேரபாய வெள்ளப்பெருக்கு ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக சீன அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே, நேற்று மாலை நேபாளத்தின் சில பகுதிகளில் ரிக்டர் அளவில் 3.2 ஆகப் பதிவான நிலநடுக்கம் மக்களிடையே பெரும் பீதியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே நிலச்சரிவு மற்றும் வெள்ள அபாயத்தில் சிக்கித் தவிக்கும் எல்லைப் பகுதி கிராம மக்களுக்கு, இந்த திடீர் நில அதிர்வு கூடுதல் அச்சத்தை அளித்துள்ளது. ஏரியின் நீர்மட்டத்தைத் தொடர்ந்து கண்காணித்து வரும் அதிகாரிகள், கரையோரப் பகுதி மக்களை உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamizhan media