தவெக ஆட்சிக் கவிழ்ப்பு பேர வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மிகக் கடுமையான சட்டச் சிக்கலில் சிக்கியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது தலைமறைவாகியுள்ள செந்தில்பாலாஜி மற்றும் அவரது தம்பியை விரைந்து கைது செய்யும் நோக்கில், தமிழக காவல்துறை தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.
இதற்காக கேரளா, கர்நாடகா, புதுச்சேரி, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்குப் பல தனிப்படைகள் விரைந்து அனுப்பப்பட்டு, தீவிரத் தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டுள்ளது. அவர் இந்தியாவை விட்டு தப்பி ஓடுவதைத் தடுக்கும் வகையில் ஏற்கனவே விமான நிலையங்களுக்கு ‘லுக் அவுட்’ நோட்டீஸ் அனுப்பப்பட்டு கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதால், எந்த நேரத்திலும் அவர் கைது செய்யப்படலாம் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

