Dailyhunt
சினிமாவுக்கு 'என்ட் கார்டு' போடுகிறாரா திரிஷா?. கோலிவுட்டை அதிரவைத்த முக்கிய பிரபலம். அதிர்ச்சியில் ரசிகர்கள்.!!!

சினிமாவுக்கு 'என்ட் கார்டு' போடுகிறாரா திரிஷா?. கோலிவுட்டை அதிரவைத்த முக்கிய பிரபலம். அதிர்ச்சியில் ரசிகர்கள்.!!!

Tamizhan media 1 week ago

டிகை திரிஷா திரையுலகை விட்டு விலகப்போவதாக வெளியாகியுள்ள தகவல் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 24 ஆண்டுகளாக முன்னணி கதாநாயகியாக வலம் வரும் இவர், தற்போது ‘கருப்பு’, ‘விஸ்வம்பரா’ மற்றும் ‘ராம்’ ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த படங்களுக்குப் பிறகு அவர் புதிய படங்கள் எதிலும் ஒப்பந்தமாகாதது, அவர் நடிப்பிற்கு முழுநேர ஓய்வு கொடுக்கப்போகிறார் என்ற வதந்தியை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்தது. ரசிகர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்திய இந்த செய்தி, தற்போது திரைத்துறையின் மூத்த தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் மூலம் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.

தனது யூடியூப் சேனலில் இது குறித்துப் பேசிய சித்ரா லட்சுமணன், திரிஷா சினிமாவிலிருந்து விலகப்போவது உண்மைதான் என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய், அரசியலில் ஈடுபடுவதற்காக சினிமாவிலிருந்து விலகுவதாக அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த நிலையில், தற்போது திரிஷாவும் இதே முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுவது திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல ஆண்டுகளாக ரசிகர்களின் கனவுக்கன்னியாகத் திகழ்ந்த திரிஷாவின் இந்த முடிவு, கோலிவுட்டில் ஒரு சகாப்தம் முடிவுக்கு வருவதைக் குறிப்பதாக பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamizhan media