Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
சிறைக்குள் புகுந்த மரணம். 28 பேர் கொடூரமாக அடித்துக் கொலை. காணாமல் போன T-56 துப்பாக்கிகள்.! நீர்கொழும்பு சிறைச்சாலையின் பகீர் பின்னணி.!!

சிறைக்குள் புகுந்த மரணம். 28 பேர் கொடூரமாக அடித்துக் கொலை. காணாமல் போன T-56 துப்பாக்கிகள்.! நீர்கொழும்பு சிறைச்சாலையின் பகீர் பின்னணி.!!

Tamizhan media 2 weeks ago

நீர்கொழும்பு சிறைச்சாலையில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான தகவல் கசிந்ததால் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல், பின்னர் சிறை அதிகாரிகளுக்கு எதிரான கொடூர வன்முறையாக வெடித்துள்ளது.

இந்த மோதலில் 19 கைதிகள் மற்றும் 7 சிறை அதிகாரிகள் உட்பட மொத்தம் 28 பேர் உயிரிழந்துள்ளனர். கைதிகள் சிறை மருத்துவமனையை உடைத்து மருந்துகளைக் கொள்ளையடித்ததுடன், விசேட பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகளை மிகக் கொடூரமான முறையில் தாக்கி கொலை செய்துள்ளனர். மேலும், கைதிகளின் கைகளுக்குச் சென்ற இரண்டு T-56 ரக துப்பாக்கிகள் மூலம் பாதுகாப்புப் பிரிவினர் மீது சுட முயன்ற சம்பவங்களும் அரங்கேறியுள்ள நிலையில், அந்தத் துப்பாக்கிகள் தற்போது வரை காணாமல் போயுள்ளன.

முந்தைய நாள் இரவே வன்முறை வெடித்தபோது விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டும், அவர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படாமல் சிறை நிர்வாகம் பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தற்காலிகமாக நிலைமையைக் கட்டுப்படுத்தியுள்ளது. கூரையில் இருந்து கீழே இறங்கிய கைதிகளின் அறைக் கதவுகள் உடைந்திருந்த நிலையிலும், அவர்களைப் பாதுகாப்பான கூண்டுகளுக்குள் அடைக்காமல் நிர்வாகம் அலட்சியமாகச் சுதந்திரமாக நடமாட விட்டுள்ளது. மறுநாள் காலை நிலைமை சுமுகமாகிவிட்டதாகக் கருதி நீதிமன்ற நடவடிக்கைகளுக்கும், பார்வையாளர்களுக்கும் சிறை நிர்வாகம் தயாராகிக்கொண்டிருந்த வேளையில், கைதிகள் உட்புறக் கதவை உடைத்துக்கொண்டு வந்து மீண்டும் கொடூரத் தாக்குதலைத் தொடங்கியுள்ளனர்.

முந்தைய நாள் இரவே கைதிகளைக் கட்டுப்படுத்தி அடைக்கத் தவறிய சிறை நிர்வாகத்தின் பலவீனமே இந்த வன்முறை மீண்டும் வெடிப்பதற்குக் முதன்மைக் காரணமாக அமைந்துள்ளது. அதோடு, அண்மைய நாட்களில் சிறை அதிகாரிகளுக்கு ஏற்பட்ட டெங்கு நோய் பாதிப்பு காரணமாகக் குறைந்தளவிலான அதிகாரிகளே பணியில் இருந்துள்ளனர். எல்லாவற்றிற்கும் மேலாக, 900 பேர் மட்டுமே தங்கக்கூடிய கொள்ளளவு கொண்ட நீர்கொழும்பு சிறைச்சாலையில், 2000க்கும் அதிகமான கைதிகளை அடைத்து வைத்திருந்த அதிக நெரிசலான சூழலே இந்த மோதல் இவ்வளவு விரைவாகவும் கொடூரமாகவும் பரவுவதற்குக் காரணமாக அமைந்தது குறித்து தற்போது கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamizhan media