Dailyhunt
"சும்மா அடிச்சு விடுங்க".. ட்ரம்ப்பின் 'X' பக்கத்தில் இருந்த அந்த ஒரு பதிவு.. காறித்துப்பிய ஈரான்.!

"சும்மா அடிச்சு விடுங்க".. ட்ரம்ப்பின் 'X' பக்கத்தில் இருந்த அந்த ஒரு பதிவு.. காறித்துப்பிய ஈரான்.!

Tamizhan media 2 weeks ago

மெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் சமீபத்திய சமூக வலைதளப் பதிவு உலக நாடுகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முதல் இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா நடத்தி வரும் இந்தத் தாக்குதலுக்கு ஈரான் கடுமையான பதிலடி கொடுத்து வருகிறது. குறிப்பாக, உலக கச்சா எண்ணெய் போக்குவரத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியுள்ளது. இதனால் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு, சர்வதேச அளவில் அமெரிக்காவிற்கு எதிரான அழுத்தம் அதிகரித்துள்ளது.

இந்த இக்கட்டான சூழலில், ஈரானின் புதிய அதிபர் தானாக முன்வந்து அமெரிக்காவிடம் போர்நிறுத்தம் கோரியதாக ட்ரம்ப் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார். ஈரானின் புதிய அதிபர் முந்தைய தலைவர்களை விடப் புத்திசாலி என்று பாராட்டியுள்ள ட்ரம்ப், அதே வேளையில் ஹார்முஸ் ஜலசந்தி முழுமையாகத் திறக்கப்பட்டால் மட்டுமே போர்நிறுத்தம் பற்றிப் பரிசீலிக்கப்படும் என்று நிபந்தனை விதித்துள்ளார். அதுவரை ஈரானை முற்றிலும் அழித்து, அவர்களைப் பழைய கற்காலத்திற்குத் திருப்பி அனுப்புவோம் என்று மிகவும் கடுமையான வார்த்தைகளால் அவர் மிரட்டல் விடுத்துள்ளார்.

இருப்பினும், ட்ரம்ப்பின் இந்தப் பதிவை ஈரான் வெளியுறவு அமைச்சகம் முற்றிலுமாக மறுத்துள்ளது. இது போன்ற எந்தவொரு கோரிக்கையையும் தாங்கள் அமெரிக்காவிடம் முன்வைக்கவில்லை என்றும், ட்ரம்ப்பின் கூற்று முற்றிலும் ஆதாரமற்ற பொய் என்றும் ஈரான் செய்தித் தொடர்பாளர் விளக்கம் அளித்துள்ளார். ஏற்கனவே பாகிஸ்தான் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடப்பதாகக் கூறப்பட்ட தகவல்களையும் ஈரான் நிராகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ட்ரம்ப் ஒருபுறம் அமைதிப் பேச்சுவார்த்தை நடப்பதாகக் கூறிவிட்டு, மறுபுறம் தாக்குதல் தொடரும் என மாற்றிப் பேசி வருவது ஈரானின் பிடிவாதத்தை மேலும் அதிகரித்துள்ளது.

தொடர்ந்து நீடிக்கும் இந்தப் போரினால் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மற்றும் எண்ணெய் கிணறுகள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருகிறது. சில வாரங்களில் போர் முடிந்துவிடும் என்று ஆரம்பத்தில் கூறிய ட்ரம்ப், இப்போது போரைத் தீவிரப்படுத்துவதாகக் கூறி வருவது உலக நாடுகளைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட வேண்டியது அவசியமாகும், ஆனால் அமெரிக்கா-ஈரான் இடையிலான இந்த மோதல் போக்கு அதற்கு முட்டுக்கட்டையாகவே உள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamizhan media