தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆந்திர பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் கிரண் குமார் ரெட்டி நியமிக்கப்பட உள்ளதாக டெல்லி அரசியல் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
2010 முதல் 2014 வரை ஒருங்கிணைந்த ஆந்திர பிரதேசத்தில் காங்கிரஸ் சார்பில் முதலமைச்சராகப் பதவி வகித்த இவர், ஆந்திர மாநிலப் பிரிவினைக்குப் பிறகு காங்கிரஸிலிருந்து விலகி, கடந்த 2023-ஆம் ஆண்டில் பாரதிய ஜனதா கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார். பாஜகவில் மூத்த தலைவராகச் செயல்பட்டு வரும் இவரைத் தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாகவும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவர வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

