Dailyhunt
"தன் மகள் ஒரு மகிழ்ச்சியற்ற சூழலில் துன்பப்படுவதை விட, அங்கிருந்து வெளியே வந்து கண்ணியத்துடன் வாழ்வதே முக்கியம்". விவாகரத்து ஆனதும் தந்தை செய்த காரியம்..!!!

"தன் மகள் ஒரு மகிழ்ச்சியற்ற சூழலில் துன்பப்படுவதை விட, அங்கிருந்து வெளியே வந்து கண்ணியத்துடன் வாழ்வதே முக்கியம்". விவாகரத்து ஆனதும் தந்தை செய்த காரியம்..!!!

Tamizhan media 1 week ago

த்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில், விவாகரத்து பெற்று வீடு திரும்பிய மகளை ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவர் மேளதாளம் முழங்க உற்சாகமாக வரவேற்ற நெகிழ்ச்சியான சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஓய்வுபெற்ற நீதிபதியான ஞானேந்திர குமார் சர்மாவின் மகள் பிரணிதாவிற்கும், ராணுவ மேஜர் ஒருவருக்கும் கடந்த 2018-ல் திருமணம் நடைபெற்றது.

எனினும், திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட தொடர் துன்புறுத்தல்கள் காரணமாக பிரணிதா விவாகரத்து கோரியிருந்தார். நீதிமன்றம் விவாகரத்து வழங்கியதையடுத்து, அவர் தனது தந்தையின் வீட்டிற்குத் திரும்பியபோது, “பெண்கள் சுமை அல்ல” என்பதை உணர்த்தும் வகையில் அவரது தந்தை மேளதாளங்கள் மற்றும் இனிப்புகளுடன் மகளை வரவேற்றுப் புதுமையான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளார்.

இந்த வரவேற்பின் போது பிரணிதாவின் குடும்பத்தினர் அனைவரும் “நான் என் மகளை நேசிக்கிறேன்” என்ற வாசகம் பொறிக்கப்பட்ட டி-சர்ட்டுகளை அணிந்து அவருக்குத் தார்மீக ஆதரவை வழங்கினர். இது குறித்துப் பேசிய நீதிபதி ஞானேந்திர குமார், “தன் மகள் ஒரு மகிழ்ச்சியற்ற சூழலில் துன்பப்படுவதை விட, அங்கிருந்து வெளியே வந்து கண்ணியத்துடன் வாழ்வதே முக்கியம் சமூகத்தின் விமர்சனங்களை விட மகளின் மகிழ்ச்சிக்கே நான் முன்னுரிமை அளிக்கிறேன்” என்று உருக்கமாகத் தெரிவித்தார்.

இந்நிலையினுள் விவாகரத்தை ஒரு தோல்வியாகப் பார்க்காமல், ஒரு பெண்ணின் புதிய தொடக்கமாகவும் சுதந்திரமாகவும் கொண்டாடிய இந்தச் செயல், சமூகத்தில் நிலவும் பிற்போக்கான கருத்துக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அமைந்துள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamizhan media