Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
தனியார் பள்ளிகளுக்கு விழுந்த பலத்த அடி. ஸ்கூல் பீஸ் விஷயத்தில் கோர்ட் எடுத்த விஸ்வரூபம். இனி ரகசியமாக கட்டணம் வாங்க முடியாது.உயர் நீதிமன்றம் பிறப்பித்த மரண மாஸ் உத்தரவு.!

தனியார் பள்ளிகளுக்கு விழுந்த பலத்த அடி. ஸ்கூல் பீஸ் விஷயத்தில் கோர்ட் எடுத்த விஸ்வரூபம். இனி ரகசியமாக கட்டணம் வாங்க முடியாது.உயர் நீதிமன்றம் பிறப்பித்த மரண மாஸ் உத்தரவு.!

Tamizhan media 1 week ago

மிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளும் அரசு நிர்ணயித்துள்ள கல்வி கட்டண விபரங்களை, பொதுமக்கள் எளிதில் அறியும் வகையில் தங்களின் அறிவிப்பு பலகைகளில் கட்டாயம் வெளியிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

தனியார் பள்ளிகள் தகவல் உரிமைச் சட்டத்தின் வரம்பிற்குள் வராது என்ற போதிலும், அவை தங்களின் செயல்பாடுகளில் நியாயத் தன்மையையும் வெளிப்படைத்தன்மையையும் கடைப்பிடிப்பது அவசியம் என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. முன்னதாக, மாநில தகவல் ஆணையம் மற்றும் தனியார் பள்ளிகள் இயக்குநரகத்தின் சுற்றறிக்கையை எதிர்த்து, அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சங்கம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது.

இந்த வழக்கை விரிவாக விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம். தண்டபாணி, தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை சட்டத்தின்படி, தங்களின் கல்வி கட்டண விபரங்களை பொதுமக்களுக்கு வெளிப்படுத்த வேண்டியது அந்தந்த கல்வி நிறுவனங்களின் கடமையாகும் என்று தெளிவுபடுத்தினார். இதன் மூலம் நர்சரி, பிரைமரி, மெட்ரிக், சி.பி.எஸ்.இ. மற்றும் பிற வாரியங்களின் கீழ் இயங்கும் அனைத்து தனியார் பள்ளிகளும் இனி வரும் நாட்களில் அரசு நிர்ணயித்த கட்டண விபரங்களை விளம்பரப் பலகையில் தெளிவாக காட்சிப்படுத்த வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடி உத்தரவு, தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையைத் தடுத்து, பெற்றோருக்கு பெரும் நிம்மதியையும் வெளிப்படைத்தன்மையையும் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamizhan media