Dailyhunt
"தண்ணீர் கூட இல்லை. நடுக் கடலில் 20,000 உயிர்கள்". 3,200 கப்பல்களில் நடக்கும் மரணப் போராட்டம். உலகமே ஸ்தம்பிக்கப் போகிறது.!

"தண்ணீர் கூட இல்லை. நடுக் கடலில் 20,000 உயிர்கள்". 3,200 கப்பல்களில் நடக்கும் மரணப் போராட்டம். உலகமே ஸ்தம்பிக்கப் போகிறது.!

Tamizhan media 1 week ago

ளைகுடா பகுதியில் வல்லரசு நாடுகளுக்கு இடையே நிலவும் அதிகாரப் போட்டி, எப்போதும் போல சாமானிய மக்களின் வாழ்வையே கேள்விக்குறியாக்கியுள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரான் மீது நடத்திய தாக்குதல்களும், அதற்குப் பதிலடியாக ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியதும் உலகப் பொருளாதாரத்தின் நரம்பு மண்டலத்தையே முடக்கியுள்ளது. டாலர் ஆதிக்கத்தை நிலைநாட்டவும், எண்ணெய் வயல்களைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் அமெரிக்கா எடுக்கும் முயற்சிகளுக்கு ஈரான் முட்டுக்கட்டையாக இருப்பதால், இரு தரப்பு மோதலில் இன்று சர்வதேச வர்த்தகம் பெரும் சரிவைச் சந்தித்துள்ளது.

இந்த மோதலின் கசப்பான நிஜமாக, ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் சுமார் 3,200 எண்ணெய் கப்பல்கள் நகர முடியாமல் முடங்கிக் கிடக்கின்றன. இதில் பணியாற்றும் 20,000-க்கும் மேற்பட்ட கப்பல் பணியாளர்களின் நிலை சொல்லொணாத் துயரமாக மாறியுள்ளது. குடிநீர் மற்றும் அத்தியாவசிய உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாமல், குளிர்சாதன வசதிகள் மட்டுமே எஞ்சியிருக்கும் நிலையில், உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு அவர்கள் கடலின் நடுவே தவித்து வருகின்றனர். நிலப்பரப்பு கண்ணுக்குத் தெரிந்தாலும், ஏவுகணைத் தாக்குதல்களுக்கு அஞ்சி கரை திரும்ப முடியாமல் அவர்கள் படும் வேதனை சர்வதேச மனிதநேயத்தின் மீதான கவலையை எழுப்பியுள்ளது.

கடல்சார் பணியாளர்களின் நல அமைப்புகள் தெரிவிக்கும் தகவல்களின்படி, அங்குள்ள பணியாளர்களில் மூன்றில் ஒரு பங்கினர் எவ்வித போனஸ் அல்லது இழப்பீடும் தேவையில்லை, தங்களை உயிருடன் தாயகம் அனுப்பினால் போதும் என்ற மனநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஏப்ரல் 13 முதல் தொடர்ச்சியாக நடத்தப்படும் தாக்குதல்களால் உயிரிழப்புகளும் காயங்களும் ஏற்பட்டு வருவது, எஞ்சியிருப்பவர்களிடையே பெரும் அச்சத்தை விதைத்துள்ளது. ஏற்கனவே இதேபோன்ற சூழலில் இரண்டு ஆண்டுகள் கடலில் சிக்கித் தவித்த அனுபவம் கொண்ட கேப்டன்கள் கூட, தற்போதைய ஏவுகணைத் தாக்குதல்களால் உதவியற்ற நிலையில் உள்ளதாகக் கண்ணீர் மல்கத் தெரிவிக்கின்றனர்.

வரலாறு முழுக்க போர் என்பது எதற்கும் தீர்வாக இருந்ததில்லை என்பதை ஆப்கானிஸ்தான் முதல் கியூபா வரையிலான சம்பவங்கள் நமக்கு உணர்த்தியுள்ளன. அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் தங்களின் பிடிவாதங்களைக் கைவிட்டு, பேச்சுவார்த்தை மேசைக்கு வராத வரையில், இந்த 20,000 பணியாளர்களின் வலி என்பது ஒட்டுமொத்த உலகப் பொருளாதாரத்தின் வலியாகவே தொடரும். போர் என்றைக்குமே அமைதியைத் தருவதில்லை; அது அழிவையும், சாமானியர்களின் கண்ணீரையும் மட்டுமே மிச்சப்படுத்துகிறது என்பதை வல்லரசு நாடுகள் உணர வேண்டிய தருணம் இது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamizhan media