Dailyhunt
தவெக-வில் இணையும் நடிகை விஜயலட்சுமி.? சென்னையில் மட்டும் நான் இருந்தா. வைரலாகும் பரபரப்பு வீடியோ.!!

தவெக-வில் இணையும் நடிகை விஜயலட்சுமி.? சென்னையில் மட்டும் நான் இருந்தா. வைரலாகும் பரபரப்பு வீடியோ.!!

Tamizhan media 1 week ago

மிழக சட்டப்பேரவைத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், பல்வேறு தரப்பினரும் அவருக்குத் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், நடிகை விஜயலட்சுமி பெங்களூருவில் இருந்து வீடியோ ஒன்றை வெளியிட்டு விஜய்க்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அதில் “வாழ்த்துகள் விஜய் அண்ணா” என்று குறிப்பிட்ட அவர், நம்பி வாக்களித்த தமிழக மக்கள் சந்தோஷமாகவும், நிம்மதியாகவும் இருக்க வேண்டும் எனத் தனது விருப்பத்தைப் பகிர்ந்துள்ளார்.

மேலும், தான் சென்னையில் இருந்திருந்தால் தன்னையும் தவெக கட்சியில் சேர்த்துக் கொள்ளும்படி விஜய்யிடம் கேட்டிருப்பேன் என நடிகை விஜயலட்சுமி அந்த வீடியோவில் பேசியுள்ளார். ஒருபுறம் புதிய உறுப்பினர்களின் வருகை குறித்த எதிர்பார்ப்பு நிலவினாலும், மறுபுறம் ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களை அடைய இன்னும் 10 இடங்கள் தவெக-விற்குத் தேவைப்படுகின்றன. காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், அக்கட்சி நிர்வாகிகள் விஜய்க்கு ஆதரவளிக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ள நிலையில், அடுத்த சில நாட்களில் தமிழகத்தில் ஒரு புதிய கூட்டணி ஆட்சி அமையுமா என்பது குறித்த பரபரப்பு அதிகரித்துள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamizhan media