Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
"தவெகவில் இணைந்த கையோடு முக்கிய பொறுப்பு." சிங்கை ராமச்சந்திரனுக்கு CM விஜய் வழங்கிய பதவி. தவெகவில் கிளம்பிய பரபரப்பு.!!

"தவெகவில் இணைந்த கையோடு முக்கிய பொறுப்பு." சிங்கை ராமச்சந்திரனுக்கு CM விஜய் வழங்கிய பதவி. தவெகவில் கிளம்பிய பரபரப்பு.!!

Tamizhan media 1 week ago

மிழக வெற்றிக் கழகத்தில் 'தவெகவில் இணைந்த கையோடு முக்கிய பொறுப்பு…' சிங்கை ராமச்சந்திரனுக்கு CM விஜய் வழங்கிய பதவி… தவெகவில் கிளம்பிய பரபரப்பு…!!அண்மையில் இணைந்த சிங்கை ராமச்சந்திரனுக்கு, 'தமிழ்நாடு ஸ்டார்ட்-அப் (ம) புத்தாக்க இயக்கத் தலைவர்' என்ற முக்கிய பொறுப்பை முதலமைச்சர் விஜய் வழங்கியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

இந்தத் திடீர் நியமனத்திற்குப் பின்னணியில் பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. முதலமைச்சர் விஜய்யின் தனிச் செயலாளரான ஜெகதீஷின் நெருங்கிய நண்பரே சிங்கை ராமச்சந்திரன் எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே அவர் நேரடியாக முதலமைச்சர் விஜய் முன்னிலையிலேயே தவெகவில் இணைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளையில், அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த பல முன்னாள் அமைச்சர்களுக்குத் தற்போது வரை எந்தவொரு முக்கியப் பொறுப்புகளும் வழங்கப்படாத நிலையில், புதிதாக இணைந்த சிங்கை ராமச்சந்திரனுக்கு உடனடியாக முக்கிய பதவி வழங்கப்பட்டிருப்பது கட்சி நிர்வாகிகள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamizhan media