Dailyhunt
தாயை நினைத்து ஏங்கிய பணிப்பெண்!. அழுதுகொண்டிருந்த பெண்ணைச் சிரிக்க வைத்த இளைஞர்களின் அன்பு.. இந்த வீடியோவை பார்த்தால் உங்கள் கண்ணீரும் வழிந்துவிடும்.!!!

தாயை நினைத்து ஏங்கிய பணிப்பெண்!. அழுதுகொண்டிருந்த பெண்ணைச் சிரிக்க வைத்த இளைஞர்களின் அன்பு.. இந்த வீடியோவை பார்த்தால் உங்கள் கண்ணீரும் வழிந்துவிடும்.!!!

Tamizhan media 1 week ago

னியாக வசிக்கும் ஆண்களுக்கு வீட்டில் சமைத்த உணவும், ஒரு இனிமையான சூழலும் கிடைக்கக் காரணமாக இருப்பவர்கள் பணிப்பெண்களே.

அவர்கள் வெறும் வேலையாட்களாக மட்டுமல்லாமல், பல நேரங்களில் குடும்பத்தில் ஒருவராகவும் மாறிவிடுகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தை 'தமாஷேவாலா' என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தை நடத்தி வரும் கிரிதார்த்த் பகிர்ந்துள்ளார். சமையலறையில் தனது பணிப்பெண் ஜோதி அக்கா அழுது கொண்டிருப்பதைப் பார்த்த கிரிதார்த்த், பதற்றத்துடன் அதற்கான காரணத்தைக் கேட்டபோதுதான், அன்று அவருக்குப் பிறந்தநாள் என்பதும், தனது பெற்றோரை நினைத்து அவர் ஏங்குவதும் தெரியவந்தது.

தன் வீட்டுப் பணிப்பெண்ணின் சோகத்தைத் துடைக்க விரும்பிய கிரிதார்த்த், உடனடியாக ஒரு கேக் வரவழைத்துத் தனது நண்பர்களுடன் இணைந்து ஜோதி அக்காவின் பிறந்தநாளைச் சிறப்பாகக் கொண்டாடினார். எதிர்பாராத இந்த அன்பால் ஜோதி அக்கா நெகிழ்ச்சியடைந்து புன்னகைக்கும் காட்சிகள் இணையத்தில் பலரது இதயங்களை வென்றுள்ளது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், கிரிதார்த்தின் மனிதாபிமானத்தைப் பாராட்டியதோடு, ஜோதி அக்காவின் அந்த அழகான புன்னகைதான் இந்த வீடியோவின் சிறப்பம்சம் என்றும் நெகிழ்ந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamizhan media