Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
திடீர் அந்தர்பல்டி..! சீமானை சீண்டுபவர்களுக்கு விஜயலட்சுமி கொடுத்த மரண மாஸ் பதிலடி. அரசியல் வட்டாரத்தில் வெடித்த புதிய புயல்.!!

திடீர் அந்தர்பல்டி..! சீமானை சீண்டுபவர்களுக்கு விஜயலட்சுமி கொடுத்த மரண மாஸ் பதிலடி. அரசியல் வட்டாரத்தில் வெடித்த புதிய புயல்.!!

Tamizhan media 1 week ago

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் இரு தரப்பிற்கும் இடையே சமரசம் ஏற்பட்டதைத் தொடர்ந்து நடிகை விஜயலட்சுமி எந்தவிதக் கருத்துகளையும் தெரிவிக்காமல் அமைதி காத்து வந்தார்.

ஆனால், தற்போது அவர் வெளியிட்டுள்ள புதிய காணொளி ஒன்றில், தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்பவர்களை வாழ விடுவதே மனிதநேயம் என்றும், அதனடிப்படையிலேயே தான் செயல்பட்டதாகவும் கூறியுள்ளார். மேலும், தொடர்ச்சியாகத் தன்னையும் சீமானையும் இணைத்துத் தரக்குறைவாக விமர்சிப்பவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், இனி சீமானுக்கு உறுதுணையாக நிற்கப் போவதாகவும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், தான் சீமானுக்கு ஆதரவாகப் பேசுவதால் தமக்கு பெரிய தொகை கைமாறியிருப்பதாகப் பலரும் பேசக்கூடும் எனவும், ஆனால் தன்னை யாராலும் பணத்தைக் கொடுத்து விலைக்கு வாங்க முடியாது எனவும் அவர் ஆணித்தரமாகத் தெளிவுபடுத்தியுள்ளார். நீண்ட காலமாகச் சீமானைக் கடுமையாக எதிர்த்து வந்த விஜயலட்சுமி, திடீரென அவருக்கு ஆதரவுக்கரம் நீட்டியிருப்பது தற்போதைய சூழலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, விஜயலட்சுமியின் இந்த அதிரடியான கருத்துகள், சமீபகாலமாக விமர்சனங்களை முன்வைக்கும் தமிழக வெற்றிக் கழகத்தினரை மறைமுகமாகச் சாடும் வகையிலேயே அமைந்துள்ளதாகப் பரவலாகப் பேசப்படுகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamizhan media