Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
திக் திக் நிமிடங்கள்.! வேகமாக வந்த எக்ஸ்பிரஸ் ரயில்.. தண்டவாளத்தில் சிக்கிய ஒட்டகம்.. வான்ஸ்ஜாலியா - ரானாவாவ் இடையே பரபரப்பு.!!

திக் திக் நிமிடங்கள்.! வேகமாக வந்த எக்ஸ்பிரஸ் ரயில்.. தண்டவாளத்தில் சிக்கிய ஒட்டகம்.. வான்ஸ்ஜாலியா - ரானாவாவ் இடையே பரபரப்பு.!!

Tamizhan media 1 week ago

குஜராத் மாநிலம் வான்ஸ்ஜாலியா மற்றும் ரானாவாவ் ரயில்வே பிரிவில் உள்ள பிராட்-கேஜ் பாலத்தின் தண்டவாளங்களுக்கு இடையே ஒட்டகம் ஒன்று எதிர்பாராதவிதமாகச் மாட்டிக்கொண்டது.அவ்வழியாக வந்த தாதர் - போர்பந்தர் சௌராஷ்டிரா எக்ஸ்பிரஸ் (19015) ரயிலின் ஓட்டுநர், பாலத்தில் ஒட்டகம் சிக்கியிருப்பதை முன்கூட்டியே கவனித்து, உடனடியாக அவசரகால பிரேக்கைப் பயன்படுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

தகவலறிந்து வந்த ரயில்வே அதிகாரிகள் மற்றும் மீட்புக் குழுவினர், இடுக்கில் மாட்டிக்கொண்ட ஒட்டகத்தை மிகவும் சிரமப்பட்டு கிரேன் உதவியுடன் பாதுகாப்பாக மீட்டனர். இந்த மீட்பு நடவடிக்கையின் காரணமாக போர்பந்தர் – ராஜ்கோட் மற்றும் போர்பந்தர் – பவ்நகர் செல்லும் ரயில்கள் உட்படப் பல ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, பின்னர் ஒட்டகம் மீட்கப்பட்ட பிறகு ரயில் போக்குவரத்து வழக்கம் போல் தொடங்கியது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamizhan media