திமுகவில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட அதிருப்தியில் முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து கட்சியிலிருந்து விலகி வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை முன்னாள் அமைச்சரும் திமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளருமான டி.ஆர். விஜய் கட்சியிலிருந்து விலகிய நிலையில், அவரைத் தொடர்ந்து கோவை வடக்கு மாவட்ட தலைமைச் செயற்குழு உறுப்பினரும் மூத்த நிர்வாகியுமான டி.ஆர். சண்முகசுந்தரம் தனது விலகல் கடிதத்தை வழங்கியுள்ளார்.
குடும்பச் சூழல் மற்றும் பணிச் சுமை காரணமாக இந்த முடிவை எடுத்திருப்பதாக அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தாலும், தேர்தல் நெருங்கும் வேளையில் மாவட்ட அளவிலான முக்கிய நிர்வாகிகள் வெளியேறுவது கட்சித் தலைமைக்கு ஒரு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. இந்த அடுத்தடுத்த விலகல்கள் கோவை உள்ளிட்ட முக்கிய மாவட்டங்களில் திமுகவின் தேர்தல் பணிகளில் பாதிப்பை ஏற்படுத்துமா என்ற விவாதம் தற்போது மேலெழுந்துள்ளது.

