Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
"திமுகவுக்கு கல்தா.. விஜய்க்கு நோ.. எடப்பாடியிடம் தஞ்சம்"... தோப்பு வெங்கடாசலத்தின் அதிரடி பிளான்.. காலையிலேயே பரபரப்பு.!

"திமுகவுக்கு கல்தா.. விஜய்க்கு நோ.. எடப்பாடியிடம் தஞ்சம்"... தோப்பு வெங்கடாசலத்தின் அதிரடி பிளான்.. காலையிலேயே பரபரப்பு.!

Tamizhan media 1 week ago

திமுகவிலிருந்து விலகிய முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், தனது தாய் கழகமான அதிமுகவில் மீண்டும் இணைவது தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தில் பெருந்துறை முன்னாள் எம்.எல்.ஏ ஜெயக்குமார் ஏற்கனவே இருக்கும் சூழலில், அங்க சென்றால் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைப்பது கடினம் எனக் கருதியே அவர் அதிமுகவை நோக்கித் திரும்பியதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், “முதலில் முறைப்படி கட்சியில் இணையுங்கள், அதன் பிறகு தேர்தல் வாய்ப்புகள் மற்றும் பொறுப்புகள் குறித்துப் பேசிக்கொள்ளலாம்” என எடப்பாடி பழனிசாமி தரப்பில் அவருக்குப் பச்சைக்கொடி காட்டப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamizhan media