Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
திராவிடக் கோட்டையில் 'தளபதி' ஆதிக்கம்: பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் அதிரடி முன்னிலை.!!

திராவிடக் கோட்டையில் 'தளபதி' ஆதிக்கம்: பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் அதிரடி முன்னிலை.!!

Tamizhan media 2 weeks ago

மிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தான் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்திலிருந்தே முன்னிலை பெற்று வருகிறார்.

திராவிடக் கட்சிகளின் கோட்டையாகக் கருதப்படும் இந்தத் தொகுதிகளில், ஒரு புதிய கட்சியின் தலைவராக அவர் பெற்று வரும் இந்த வெற்றி வாய்ப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆரம்பக்கட்ட முடிவுகளின்படி, திமுகவின் பலமான கோட்டைகளாக அறியப்பட்ட இந்த இடங்களிலேயே விஜய் முன்னிலை வகிப்பது மற்ற அரசியல் கட்சிகளுக்குப் பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளதாகத் தெரிகிறது. தேர்தல் ஆணைய விதிமுறைப்படி டெபாசிட் பெறுவதற்கே கடும் சவால்கள் இருக்கும் எனக் கணிக்கப்பட்ட நிலையில், தற்போது அவர் வெற்றியை நோக்கி நகர்வது குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamizhan media