Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
திருப்பதி நோக்கி சென்ற தனியார் பேருந்து. ஆட்டோ மீது மோதி துடிதுடித்து இறந்த 6 பேர்.. கதறும் குடும்பத்தினர்.. பெரும் சோகம்.!!

திருப்பதி நோக்கி சென்ற தனியார் பேருந்து. ஆட்டோ மீது மோதி துடிதுடித்து இறந்த 6 பேர்.. கதறும் குடும்பத்தினர்.. பெரும் சோகம்.!!

Tamizhan media 2 weeks ago

ந்திரப் பிரதேச மாநிலம் பல்நாடு மாவட்டம் சிலகலூரிபேட்டை அருகே தனியார் பேருந்தும் ஆட்டோவும் மோதிய பயங்கர வீதி விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விஜயவாடாவில் இருந்து திருப்பதி நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து, கொண்டமஞ்சலூரில் இருந்து வேலூருக்குச் சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது பலமாக மோதியுள்ளது.

இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்த சிலகலூரிபேட்டை வேலூர் கிராமத்தைச் சேர்ந்த 6 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இவ்விபத்தில் காயமடைந்த 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், அவர்கள் உடனடியாகக் குண்டூர் அரசுப் பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamizhan media