Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
"தொடர் டார்ச்சர். அதான் முடிச்சுட்டேன்!". அளவுக்கு மீறிய ஆசை. கடைசியில் ஆசிட் வீச்சு. ஆந்திர பெண் கொலையில் வெளியான அதிர்ச்சி வாக்குமூலம்.!!

"தொடர் டார்ச்சர். அதான் முடிச்சுட்டேன்!". அளவுக்கு மீறிய ஆசை. கடைசியில் ஆசிட் வீச்சு. ஆந்திர பெண் கொலையில் வெளியான அதிர்ச்சி வாக்குமூலம்.!!

Tamizhan media 2 weeks ago

ந்திர மாநிலம் சவரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த விதவைப் பெண்ணான அருணா (48), உறவினர் திருமணத்திற்காக தாமரைப்பாக்கம் அடுத்த வதட்டூர் கிராமத்திற்கு வந்தபோது கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார்.

பெரியபாளையம் அருகே உள்ள தொட்டாரெட்டிகுப்பம் வயல்வெளியில், ஆசிட் ஊற்றப்பட்டு முகம் சிதைக்கப்பட்ட நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. கொலை நடந்த இடத்தில் கிடைத்த அருணாவின் செல்போன் அழைப்பு விவரங்களை வைத்து ஊத்துக்கோட்டை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் அவர் கடைசியாகப் பேசிய வதட்டூரைச் சேர்ந்த கரும்பு வெட்டும் தொழிலாளியான பாரதிராஜா (44) என்பவரைப் பிடித்து விசாரித்ததில் இந்த கொலையின் பின்னணி வெளிச்சத்திற்கு வந்தது.

போலீசாரிடம் பாரதிராஜா அளித்த வாக்குமூலத்தில், இருவருக்கும் இடையே இருந்த கள்ளக்காதல் விவகாரமே இந்தக் கொலைக்குக் காரணம் எனத் தெரிவித்தார். அருணா அடிக்கடி தன்னைத் தனிமையில் சந்திக்குமாறு வற்புறுத்தியதாகவும், அவரது தொடர்ச்சியான பாலியல் தொல்லைகளால் ஆத்திரமடைந்து அவரைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்ததாகவும் கூறினார். அதன்படி, உல்லாசமாக இருக்கலாம் என ஆசை வார்த்தை கூறி அருணாவை பைக்கில் அழைத்துச் சென்ற பாரதிராஜா, அவரை அடித்துக் கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளார். பின்னர் அடையாளத்தை மறைக்க முகத்தில் ஆசிட் மற்றும் பைக் ஆயில் ஊற்றிவிட்டுத் தப்பியோடிய அவர், தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamizhan media