பாடகி கெனிஷா பிரான்சிஸ், நடிகர் ஜெயம் ரவி மற்றும் துபாயைச் சேர்ந்த ஈவென்ட் மேனேஜர் மெர்லின் ஆகியோருக்கு இடையே நிலவி வரும் மோதல் குறித்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
தனியார் ஊடக நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற தயாரிப்பாளர் பாலாஜி பிரபு, கெனிஷாவின் உண்மையான பின்னணி மற்றும் துபாயில் நடந்த அநாகரிகமான சம்பவங்கள் குறித்துப் பல அதிரடி உண்மைகளைப் பகிர்ந்துள்ளார். மெர்லின் அண்மையில் அளித்த பேட்டியின் அடிப்படையில், கெனிஷாவின் மிரட்டல்களையும் ஏமாற்று வேலைகளையும் அவர் இதில் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார்.
கிராமப்புறங்களில் வலம் வரும் சூனியக்காரிகளின் நவீன வடிவமே இந்த “ஸ்பிரிச்சுவல் ஹீலர்” என்று சாடியுள்ள பாலாஜி பிரபு, கோவாவில் ஆன்மீக சிகிச்சை என்ற பெயரில் மன உளைச்சலில் இருப்பவர்களைத் தன்வசப்படுத்தி ஏமாற்றுவதையே கெனிஷா வாடிக்கையாகக் கொண்டுள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார். தனது குடும்பப் பிரச்சினைகளால் மனமுடைந்து போயிருந்த நடிகர் ஜெயம் ரவி, இந்தச் சூழலில்தான் இவரிடம் சென்று சிக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. ஆரம்பத்தில் பெரிய அளவில் பாடகியாகப் பிரபலமாகாத கெனிஷா, ஜெயம் ரவியின் தொடர்பிற்குப் பிறகே அறியப்பட்டு, சினிமா வாய்ப்புகளைப் பெறத் தொடங்கினார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தச் சூழலில், கடந்த 20 வருடங்களாக துபாயில் வெற்றிகரமாக ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் நடத்தி வரும் நாகர்கோவிலைச் சேர்ந்த மெர்லின், ஒரு இசை நிகழ்ச்சிக்காகக் கெனிஷாவை 9 லட்சம் ரூபாய் சம்பளத்தில் ஒப்பந்தம் செய்துள்ளார். அவருடன் வரும் குழுவினர் 6 பேருக்கு பிசினஸ் கிளாஸ் டிக்கெட் மற்றும் 5 நட்சத்திர ஹோட்டல் தங்குமிடம் போன்ற அனைத்து சொகுசு வசதிகளையும் மெர்லின் செய்துகொடுத்துள்ளார். தம்மோடு நடிகர் ஜெயம் ரவியும் வருவதாகக் கெனிஷா கூறியதால் மெர்லின் இரட்டிப்பு மகிழ்ச்சியடைந்துள்ளார். ஆனால், அவர்கள் துபாய் ஹோட்டலுக்கு வந்திறங்கியபோது நிலைமையே தலைகீழாக மாறியுள்ளது.
அன்போடு பூங்கொத்து கொடுத்து வரவேற்கச் சென்ற மெர்லினின் நெற்றிப் பொட்டில் தன் விரலை வைத்து, சுவற்றில் முட்டும் அளவுக்குப் பலமாகத் தள்ளிக் கெனிஷா மிரட்டியுள்ளார். அங்கிருந்த ஊழியர்கள் மற்றும் பிற விருந்தினர்கள் முன்னிலையிலேயே மிகக் கொச்சையான வார்த்தைகளால் மெர்லினைக் காயப்படுத்தியபோது, நடிகர் ஜெயம் ரவியும் உடனிருந்து மெர்லினைச் சத்தம் போட்டுள்ளார். இந்த வன்முறைக்கு பின்னால் ஒரு பெரிய திட்டமிடல் இருந்துள்ளது. மெர்லினின் குடும்பப் பின்னணியை ரகசியமாகத் திரட்டிய கெனிஷா, அவருக்கு ஆன்மீகக் கவுன்சிலிங் தருவதாகக் கூறி 3 லட்சம் ரூபாய் பறிக்க முயன்றுள்ளார். அதற்கு மெர்லின் மறுத்ததாலும், கூடுதல் பணம் தர மறுத்ததாலுமே கெனிஷா இவ்வாறு வன்மத்தைக் காட்டியுள்ளார்.
நிகழ்ச்சி நாளன்றும் “ஏற்பாடுகள் சரியில்லை, நான் பாட மாட்டேன்” எனச் சமூக வலைத்தளங்களில் பொய் வீடியோ வெளியிட்டு மெர்லினைக் கெஞ்ச வைத்த கெனிஷா, மேடையில் பாடி முடித்த மறுநாளே யாரிடமும் சொல்லாமல் தன் குழுவோடு ஏர்போர்ட் சென்று தப்பியோடியுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட மெர்லின் சிசிடிவி ஆதாரங்கள் மற்றும் பணப் பரிவர்த்தனை ஆவணங்களுடன் துபாய் போலீசில் புகார் அளித்தார். வழக்கை விசாரித்த துபாய் நீதிமன்றம் தற்போது கெனிஷாவிற்கு இந்தக் கிரிமினல் வழக்கில் கடுமையான தண்டனை விதித்துள்ளது. இதனால் கோவாவில் தலைமறைவாக இருக்கும் கெனிஷா, இனி துபாய் சென்றால் சிறையில் அடைக்கப்படுவார் என்றும், ஜெயம் ரவியே இவர்களிடம் பயந்து போய் மாட்டித் தவித்து வருவதாகவும் பாலாஜி பிரபு அந்த நேர்காணலில் எச்சரித்துள்ளார்.

