Dailyhunt
"வெறும் ஒரு டிகிரி போதும்!. RBI-யில் கைநிறைய சம்பளத்தில் 'ஆபீசர்' வேலை. மே 20 கடைசி நாள். உடனே அப்ளை பண்ணுங்க".!!!

"வெறும் ஒரு டிகிரி போதும்!. RBI-யில் கைநிறைய சம்பளத்தில் 'ஆபீசர்' வேலை. மே 20 கடைசி நாள். உடனே அப்ளை பண்ணுங்க".!!!

Tamizhan media 5 days ago

ங்கிகளின் வங்கி என்று போற்றப்படும் இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI), அதிகாரி பிரிவில் காலியாக உள்ள 60 பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்திருப்பவர்கள் இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 21 வயது முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். இந்தப் பணிக்கான தேர்வு முறையானது ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு என இரு கட்டங்களாக நடைபெறும். தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை உட்பட 17 முக்கிய நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் opportunities.rbi.org.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். பொதுப்பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ. 850 நிர்ணயிக்கப்பட்டுள்ளது, எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவினருக்கு ரூ. 100 மட்டும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 20.5.2026 ஆகும். மத்திய அரசு வங்கியில் உயர் அதிகாரியாகப் பணியாற்ற விரும்பும் பட்டதாரிகளுக்கு இது ஒரு மிகச்சிறந்த வாய்ப்பாகும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamizhan media