Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
விஜய் உடன் கூட்டணி.. அமைச்சரவையில் இடம்.. தலைகீழாக மாறிய தமிழக அரசியல்.!

விஜய் உடன் கூட்டணி.. அமைச்சரவையில் இடம்.. தலைகீழாக மாறிய தமிழக அரசியல்.!

Tamizhan media 2 weeks ago

மிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு 107 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ள நிலையில், தனிப்பெரும்பான்மை இல்லாததால் மாநிலத்தில் கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான அரசியல் நகர்வுகள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன.

ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மையை நிரூபிக்க காங்கிரஸ், பாமக, விசிக மற்றும் இடதுசாரி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தவெக திட்டமிட்டு வரும் சூழலில், விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் காங்கிரஸை கூட்டணிக்கு அழைத்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்குப் பதிலளித்த காங்கிரஸின் முக்கியத் தலைவர் ஒருவர், மேலிடத்துடன் ஆலோசித்த பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கூறியதுடன், புதிய அமைச்சரவையில் காங்கிரஸிற்கு முக்கியத் துறைகளுடன் கூடிய அதிகாரப் பகிர்வு அளிக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையை முன்வைத்துள்ளதாகத் தெரிகிறது. இந்தத் திடீர் அரசியல் மாற்றங்கள் தமிழகத்தில் முதல்முறையாக ஒரு கூட்டாட்சி அமையுமா அல்லது புதிய திருப்பங்கள் ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பை மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamizhan media